மதுரை அருகே வைரஸ் காய்ச்சலால் சிறுமி பலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: மேலூர் அருகே வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த கூத்தப்பட்டியில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சங்கீதா என்ற 17 வயது சிறுமி கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்.

A 17 year old girl dead due to Viral fever near in Madurai

இதையடுத்து அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சங்கீதா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி உயிரிழந்ததால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். காய்ச்சல் பரவுவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A 17 year old girl dead due to Viral fever near in Madurai. villagers afraid of the fever asking govt to prevant this.
Please Wait while comments are loading...