For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விவசாயியைத் தற்கொலைக்குத் தூண்டிய 'அடாவடி' ஐ.ஓ.பி வங்கி மேனேஜர் மீது வழக்குப் பதிவு

நெல்லை, மானூர் சித்தாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் வேம்பு கிருஷ்ணனைத் தற்கொலைக்குத் தூண்டிய வங்கி மேலாளர் பெருமாள் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக காவல்துறையினர் வழக்குப் பதிவி செய்துள்ளனர்.

By Suganthi
Google Oneindia Tamil News

நெல்லை: விவசாயி வேம்பு கிருஷ்ணனைத் தரக்குறைவாகத் திட்டியதால் அவமானடைந்த அவர் செய்துகொண்டார். தற்கொலைக்குத் தூண்டிய வங்கி மேலாளர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

நெல்லை மாவட்டம் மானூர் பகுதியின் சித்தாறு பாசன விவசாயச் சங்கத்தை சேர்ந்தவர் வேம்பு கிருஷ்ணன். இவர் மானூர் இந்தியர் ஓவர்சீஸ் வங்கியில் பயிர்க்கடன் மற்றும் நகைக் கடன் வாங்கியுள்ளார்.

A case filed against Manur indian overseas bank manager Perumal

'நீண்டநாள் பயிர்க்கடன்' என்ற பயிர்க்கடனை வாங்கிய வேம்பு கிருஷ்ணன், கடந்த வருடம் வரை சரியாக தவணை கட்டியுள்ளார். ஆனால், கடந்த ஒரு வருடமாக வேம்பு கிருஷ்ணனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாலும், வறட்சியாலும் அவரால் பயிர்க்கடனைக் கட்டமுடியவில்லை.

இந்நிலையில், அவர் தன் மனைவியின் நகையை அடகு வைக்த்திருந்தார். அதனை மீட்க வங்கிக்குச் சென்ற அவரை வங்கி மேலாளர் பெருமாள் அவமானக் குறைவாகத் திட்டியுள்ளார். மேலும், வேம்பு கிருஷ்ணன் நகையைத் திருப்பியதும், உடனே பயிர்க்கடனை கட்ட வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். மேலும் 3 மணிநேரம் காரணமின்றி அவரை வங்கியில் அமர வைத்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த வேம்பு கிருஷ்ணன், வீட்டிற்கு வந்து கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வேம்பு கிருஷ்ணன் கடிதத்தில் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இந்த அடிப்படையில், தற்கொலைக்குத் தூண்டியதாக மானூர் இந்தியவன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் பெருமாள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

English summary
In Thirunelveli, manur indian overseas bank manager Perumal insulted a farmer Vembu krishnan. After that Vembu krishanan committed suicide with a suicidal note. Now police registered a case against Bank manager.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X