நீரின்றி கருகிய மல்லிகைச் செடிகள்.. விஷம் குடித்து விவசாயி தற்கொலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

கரூர்: தொகைமலை அருகே நீரின்றி மல்லிகைச் செடி கருகியதால் விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் தொகைமலை அருகே சோப்பலாப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி பிரபு. இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் மல்லிகை பயிரிட்டிருந்தார்.

A farmer near in Karur commit suicide

இந்நிலையில் இந்த ஆண்டு பருவமழை முறையாக பெய்யாத காரணத்தால் கடுமையான வறட்சி ஏற்பட்டது. மல்லிகை பூக்களுக்கான சீசன் தற்போது நிலவி வரும் நிலையில் பிரபுவின் மல்லிகை தோட்டத்தில் செடிகள் தண்ணீர் இன்றி காய்ந்தன.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான விவசாயி பிரபு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். நீரின்றி மல்லிகைச் செடி கருகியதை கண்டு விவசாயி பிரபு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A farmer near in Karur commit suicide after his jasmine plants dried without water. Farmer named Prabu commit suicide.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற