மின் கட்டணம் பில்லிங் முறையில் உள்ள மிகப்பெரிய முரண்பாடு.. நெட்டிசன் பகிர்ந்த உண்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: மின் கட்டணம் தொடர்பான பில்லிங் முறையில் பலருக்கும் மிகப்பெரிய முரண்பாடு எதனால் வரும் என்றால், வீடு பூட்டியிருக்கும் போது தான். கணக்கெடுக்க வரும் போது வீடு பூட்டியிருந்தால், அவர்கள் கடந்த மாத பில்லிங் தொகை அல்லது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் இருந்த பில்லிங் தொகையை போட்டுவிடுவார்கள். அப்போது மிகப்பெரிய அளவில் இருந்தால் அந்த தொகையை தான் நீங்கள் கட்ட வேண்டியதிருக்கும். ஆனால் அடுத்த மாதத்தில் உண்மையில் எவ்வளவு ஓடியிருந்தது என்பதை கணக்கிட்டு சரி செய்ய வேண்டும். ஆனால் பெரும்பாலும் அந்த 2 மாதத்தில் வரும் தொகையை மட்டுமே பில்லாக கட்ட சொல்வார்கள். ஏற்கனவே கட்டிய தொகையில் கழிப்பது இல்லை.. இதுபற்றி வித்யாசாகர் என்பவர் தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

வித்யாசாகர் ஜெகதீஷன் என்பவர் வெளியிட்ட பதிவில் கூறுகையில், "வீடு பூட்டியிருக்கும் போது, தமிழ்நாடு மின்சார வாரியம் முந்தைய மீட்டரின் அளவை அடிப்படையாகக் கொண்டு மின்கட்டணத்தைக் கணக்கிட்டு வசூலிக்கிறது. ஆனால் அடுத்த முறை நேரில் வந்து உண்மையான மீட்டர் அளவை எடுக்கும் போது, அவர்கள் முந்தைய அளவிற்கும் தற்போதைய அளவிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் கணக்கிட்டு மொத்தக் கட்டணத்தைப் போடுகிறார்கள்.

A major discrepancy in the electricity billing system A fact shared by a netizen

அப்படிப் போடும்போது, ஏற்கனவே அவர்களிடம் நாம் செலுத்திய தொகையைக் கழித்துச் சரிசெய்ய வேண்டும் தானே? ஆனால் சரி செய்யப்படுவது இல்லை. இது பொதுமக்களுக்கு இரண்டு முறை பண்ம் செலுத்துவது போன்றதாக மாறிவிடுகிறது.

உதாரணமாக, எனது கணக்கில் 436 யூனிட் வித்தியாசம் வருகிறது என்றால், அதில் 287 யூனிட்டுகளுக்கான கட்டணத்தை நான் ஏற்கனவே (முந்தைய பில்லில்) செலுத்திவிட்டேன். எனவே நான் மீதமுள்ள 149 யூனிட்டுகளுக்குத்தானே பணம் செலுத்த வேண்டும்? அந்த முழு 436 யூனிட்டுகளுக்கும் நான் ஏன் மீண்டும் ஒருமுறை மொத்தமாகப் பணம் செலுத்த வேண்டும்? வேறு யாராவது இந்த பிரச்சனையை எதிர்கொள்கிறீர்களா அல்லது எதிர்கொண்டீர்களா?" என்று கேட்டிருந்தார்.

அவர் சொல்ல வருவது என்னவென்றால், மீட்டர் ரீடிங் எடுக்கும் நபர் வரும்போது வீடு பூட்டியிருந்தால், மின்சார வாரிய அமைப்பில் தோராயமாக அல்லது முந்தைய பயன்பாட்டின் அடிப்படையில் ஒரு கட்டணம் (உதாரணமாக 287 யூனிட்) போடுவார். அதனையும் நீங்கள் செலுத்திவிடுவீர்கள். ஆனால் அடுத்த 2 மாதங்கள் கழித்து உண்மையான அளவு (உதாரணமாக 436 யூனிட்) எடுக்கப்படும் போது, ஏற்கனவே செலுத்திய 287 யூனிட்டைக் கழித்து மீதி 149 யூனிட்டுக்கு மட்டும் கட்டணம் வசூலிப்பதற்குப் பதிலாக, 436 யூனிட்டுகளையும் ஒரே பில்லில் சேர்ப்பதாக வித்யாசகர் ஆதங்கப்பட்டுள்ளார்..

இதனால் யூனிட் அளவு அதிகரிப்பதுடன், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகப்படியான ஸ்லாப் விகிதத்திற்கு தள்ளப்படுவீர்கள். மேலும், ஏற்கனவே செலுத்திய பணமும் சரியாகக் கழிக்கப்படாமல் கூடுதல் சுமை ஏற்படும் என்று ஆதங்கத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+