For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மார்க் குறைவால் மாற்றுத் திறனாளி மாணவிக்கு சீட் மறுப்பு… டெய்லரிங் படிக்கச் சொன்ன அடாவடி பள்ளி!

சென்னையில் செவித்திறன் குறைபாடுள்ள மாணவிக்கு மார்க் குறைவால் சீட் தர தனியார் பள்ளி மறுத்துள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றதால் மாற்றுத்திறனாளி மாணவியை தையல் வேலைக்கு அனுப்புமாறும் தனியார் பள்ளி பிளஸ் 1 சீட் தர மறுத்துள்ளது.

சென்னை எண்ணூர் கத்திவாக்கம் வள்ளுவர் நகரைச்சேர்ந்த ரம்யா செவித்திறன் குறைபாடுள்ள மாணவி. நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் எண்ணூரில் உள்ள புனித ஜோசப்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.

ரம்யாவின் தந்தை இளமுருகன் மற்றும் தாய் கீதா கூலித் தொழிலாளர்கள். இந்த ஆண்டு பொதுத்தேர்வில் 309 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ள ரம்யா பதினோறாம் வகுப்பில் சேர அதே பள்ளியை அணுகியுள்ளார்.

பள்ளி மறுப்பு

பள்ளி மறுப்பு

ஆனால் மாற்றுத்திறனாளி மாணவிக்கு சேர்க்கை விண்ணப்பம் தர உதவி தலைமை ஆசிரியை மறுத்துவிட்டார். மேலும், தற்போதைய பாடத்திட்டம் ரம்யாவிற்கு கடினமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

அடாவடி பதில்

அடாவடி பதில்

மேலும் ரம்யாவிற்கு படிப்பு வராது, அவளை தையல் கிளாஸ் அல்லது வேறு ஏதேனும் கைத்தொழிலில் சேர்த்த விடுங்கள் என்று கூறியுள்ளார் உதவி ஆசிரியை. இதனால் மனம் நொந்த மாற்றுத்திறனாளி மாணவி கண்ணீருடன் பள்ளியை விட்டு வெளியேறியுள்ளார்.

விடாத நற்பெயர் மோகம்

விடாத நற்பெயர் மோகம்

மாணவர்களுக்கு மன உளைச்சல் இருக்கக் கூடாது என்று ரேங்க் முறையை தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் இருந்து அரசு ரத்து செய்தது. ஆனால் கல்வி பயிற்றுவிக்கும் கூடங்கள் அவர்களுக்கு கல்வியறிவை புகட்டாமல் மறுபடியும் மதிப்பெண்ணையே மையப்படுத்துவது ஏன் என்பது தான் புரியவில்லை.

மாற வேண்டும்

மாற வேண்டும்

என்ன செய்தாலும் பள்ளியின் நற்பெயர் கெட்டுவிடும் என்ற போக்கை தனியார் பள்ளிகள் எப்போது தான் கைவிடுமோ தெரியவில்லை. சிறு விஷயங்களுக்கே மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் நிலைமை மேலும் மோசமடையும் என்பதை புரிந்து பாதிக்கப்பட்ட மாணவிக்கு சீட் தர முன் வர வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர் கல்வியாளர்கள்.

English summary
A Private school at Chennai rejects plus 1 admission for disability student Ramya because of she scored low marks and advised her to join in small scale business.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X