காதலியால் விரட்டியடிக்கப்பட்ட ஒருத்தர்தான் இந்த ரிங்டோனை போட்டிருக்கனும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  காதலர் தினம்...பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள்?

  சென்னை: காதலர் தினத்தையொட்டி காதல் சார்ந்த விஷயங்கள், எதிர்ப்பு விஷயங்கள் என சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் ஒரு சூப்பரான ரிங்டோன் வலம் வருகிறது. அதை நிச்சயம் காதலியால் விரட்டியடிக்கப்பட்ட அல்லது ஏமாற்றப்பட்ட ஒருத்தர் பார்த்த வேலையாகத்தான் இருக்கும் என தெரிகிறது.

  காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இன்று அதிகாலை முதலே காதலர்கள் டிப்டாப்பாக ரெடியாகி காதலிக்கான பரிசு பொருளை வாங்கிக் கொண்டு சிட்டாக பறந்து வருகின்றனர்.

  A ring tone goes viral in Valentines day

  சமூக வலைதளங்களில் காதலர் தினம் படத்தில் நடிகர் குணால் ரோஜாப்பூவுடன் இருக்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் கார்த்திக் படத்தில் நடித்த ஹீரோயின் ஐ லவ் திஸ் இடியட் என்று ஒரு டயலாக்கை கூறுவார்.

  இதுவும் காதலர் தினம் அன்று மிகவும் பிரபலம் ஆகும். ஆனால் அத்துடன் வசந்த மாளிகை படத்தில் வரும் யாருக்காக இது யாருக்காக பாடலில் வரும் வரிகளை கோர்த்து விட்டு அது ரிங்டோனாக சிலர் வைத்துள்ளனர்.

  அதில் ஐ லவ் திஸ் இடியட் என்ற டயலாக்குடன் மரணம் என்னும் தூது வந்தது.. அது மங்கை என்னும் வடிவில் வந்தது.... என்ற பாடல் வரிகள் இணைக்கப்பட்டு நகைச்சுவையாக உள்ளது.

  காதலர்கள் சந்தோஷமாக கொண்டாடிவரும் நிலையில் இந்த ரிங்கோடனை வைத்திருப்பவர்கள் காதலியால் விரட்டியடிக்கப்பட்ட ஒருவராகத்தான் இருக்கும் என்று நமது 7-ஆம் அறிவுக்கு எட்டியுள்ளது. அந்த ரிங்டோனை நீங்களும் கேட்டு களியுங்கள்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  A funny ring tone which goes viral in Social medias on the occassion of Valentines Day.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற