'எங்க ஆபிஸ்லயும் ஒரு சால்வை சும்மா கிடக்கு...' 'அப்ப வாங்க கேப்டனை பாத்துடலாம்!'

Subscribe to Oneindia Tamil

- முத்துராமலிங்கன்

நேரம் இன்று காலை 11 மணி...

கட்சி அலுவலகத்துக்கு வந்த வைகோவுக்கு பயங்கர போர் அடிக்கிறது.

'வெள்ளம் வடிஞ்சாச்சி. பள்ளம் சரியாச்சி. நிவாரண உதவி வழங்கலாமுன்னு பாத்தா வாலண்டியர்ஸ் வழிமறிச்சி நிக்குறானுக.

‘அடடா... நான் இப்ப எதுனாச்சும் பண்ணியே ஆகணுமே?'

திருமாவளவனுக்கு போனைப் போடுகிறார்.

A Satire on Vijayakanth's meet with Vaiko and others

திருமா: சொல்லுங்க தலைவரே. கொஞ்சம் முன்னாலதான் முத்தரசனும், ஜி.கே.ராமகிருஷ்ணனும் பேசினாங்க. அவங்களும் சும்மாதான் இருக்காங்க. நம்ம முன்னால யாரும் மைக்கை நீட்டாட்டியும் பரவாயில்லை. பீப் சாங்கைப் பத்தி வாலண்டியரா பேசி வண்டியில ஏறுவமான்னு டிஸ்கஸ் பண்ணுற அளவுக்கு ஆகிடுச்சி நிலைமை...

வைகோ: அதை டச் பண்ணுனா நமக்கு தேவையில்லாம ராஜா கூட ரைட்ஸ் பிரச்சினை வரும். வேற எதாவது ஐடியா பண்ணுங்க தம்பி...

இதற்குள் கான்ஃபரன்ஸில் முத்தரசனும், ராமகிருஷ்ணனும் தாங்களே வாலண்டியராக வந்துசேருகிறார்கள்.

முத்தரசன்: தம்பிங்களா ஒரு யோசனை. கொஞ்ச நேரம் முன்னால யாரோ ஊர்பேர் தெரியாத தம்பி, யாருக்கு என்னத்துக்குப் போடுறமுன்னே தெரியாம எனக்கு ஒரு சால்வையைப் போட்டுட்டுப் போனாப்ல. ஸ்லிப்பைக்கூட பிரிக்கல. வாங்களேன் அப்பிடியே மொத்தமா கிளம்பிப்போய் கேப்டனுக்கு சாத்திட்டு ஜாலியா அரட்டை அடிச்சிட்டு வரலாம். கூட்டணி பத்தி பேசுறாரோ இல்லையோ பிரியாணி கன்ஃபர்ம்.

திருமா: நம்மள மாதிரி அவரும் சும்மா இருப்பாருன்னா சொல்றீங்க?

வைகோ: கான்ஃபரன்ஸ்ல இருக்குறப்ப கொஞ்சம் கான்ஃபிடண்டாத்தான் இருக்கனும்.. இருந்தாலும் சொல்றேன். போனைப் போட்டார்னா மணிக்கணக்குல கொன்னு கொலையெடுக்குறார்ப்பா. சுதிஷ் வேற சும்மாதான் இருப்பார். வாங்க நம்பிப் போகலாம்.

கேப்டன் கட்சி அலுவலக வாசலில் இறங்கும்போது ஒருத்தருக்கொருத்தர் ஜெர்க் ஆகின்றனர். ஒவ்வொருவர் கையிலும் லேபிள் பிரிக்கப்படாத சால்வை.

ஜி.கே.ராமகிருஷ்ணன்: இதுக்கெல்லாம் ஜெர்க் ஆகலாமா? எங்க கட்சி ஆபிஸ்லயே ஒரு சால்வை சும்மா இருந்துருக்குன்றப்ப... உங்களுக்கெல்லாம் சொல்லவே வேண்டாம். சரி வாங்க எல்லாருமே போடுவோம்.

கேப்டன் அவர்களை வரவேற்று, சால்வைகளை ஏற்று அமரவைக்கிறார்.

திருமா: இப்ப பாருங்க கேப்டன் தேர்தல் நெருங்குது...

கேப்டன்: ஆமா தேர்தல் நெருங்குது.

வைகோ: மக்கள் நம்ம கூட்டணி ஆட்சி அமைக்கணும்னு எதிர்பார்க்குறாங்க.

கேப்டன்: அதைத்தான் நானும் பிரேமலாதாவும் எல்லா மேடைகள்லயும் அடிச்சிச் சொல்லிட்டு வர்றோமே...

முத்தரசன்: ஆனா ஒரு முடிவு எடுக்காமலே காலம் கடத்துறோம்னு மீடியாக்காரங்க கடுப்பாகுறானுங்க.

கேப்டன்: அவனுங்கள விடுங்க. வாங்குற சம்பளத்துக்கு எங்கயாவது மைக்கை நீட்டிக்கிட்டே இருக்கணும். நான்லாம் உனக்கு அறிவு இருக்கான்னு கேக்கமாட்டேன். தூக்கி அடிச்சிட்டுத்தான் வேற வேலை பாப்பேன்!

வைகோ: அட விஷயத்தை விட்டுட்டு எதையோ பேசி ஏங்க அவரை டென்சனாக்குறீங்க... தம்பி திருமா அந்தத் துண்டைக் குடுப்பா.

அடுத்த நொடி, விஜயகாந்துடன் துண்டுக்குள் கைகளை விட்டு பேரம் பேச ஆரம்பிக்கிறார் வைகோ.

முதல் பேரம்... அஞ்சு வருஷம் அஞ்சு பேர். ஆளுக்கு ஒரு வருடம் முதல்வர் .

கேப்டன் நிராகரிக்கிறார்.

அடுத்த பேரம். கேப்டனுக்கு ரெண்டரை வருடம். மீதி ரெண்டரை வருடம் இவர்கள் நால்வருக்கு. கேப்டன் அதையும் ரிஜக்ட் செய்கிறார்.

இறுதியில் நாலு வருடத்தை கேப்டனுக்கு தாரை வார்த்து நாங்க ஆளுக்கு மூணு மாசமாவது முதல்வரா இருந்துக்கிறோம், என்று கண்ணில் ஜலம் வைக்கிறார்.

அதற்கு 'கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. வூட்டுக்காரம்மா கிட்ட கலந்துபேசி பதில் சொல்றேன்,' என்று சைகை செய்து கண்ணடித்து வழியனுப்புகிறார் கேப்டன்.

பேரம் படியவில்லை. வெளியே வந்ததும்...

வைகோ: கேப்டன் தம்பி ரொம்பப் பிடிவாதமா இருக்காரே. அஞ்சு விரல்ல ஒரு விரலைக்கூட விட்டுத் தரமாட்டேன்றாரே?

திருமா: அட போங்க தலைவரே நான் ஒரு கட்டத்துல அவரோட சுண்டு விரலை மட்டும் கூட சுரண்டிப் பார்த்துட்டேன். நறுக்குன்னு கிள்ளி வச்சிட்டாரு...!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+