4 நாட்களுக்கு கன மழை.. ஆந்திராவில் வெள்ளம்.. பிபிசி வானிலை பிரிவு எச்சரிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சென்னையில் மழை நிலவரம் எப்படி?...வீடியோ

  சென்னை: வங்கக் கடலில், உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திராவில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்று பிபிசி வானிலை பிரிவு எச்சரிக்கைவிடுத்துள்ளது.

  பிபிசி வானிலை பிரிவு டிவிட்டரில் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் கூறியுள்ளதாவது: வங்கக் கடலில், உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அடுத்த நாலைந்து நாட்களில் கன மழை பெய்யக் கூடும். இதனால் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.

  அதேநேரம், அந்த டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் சென்னையின் அருகே மேக மூட்டம் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. எனவே சென்னையில் மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  "A strengthening depression in the Bay of Bengal is likely to bring heavy rain to the eastern Indian provinces of Andhra Pradesh to West Bengal over the next 4-5 days which may cause flooding across the region" says BBC weather.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற