கலீஜ்ன்னா என்ன?...காயத்ரியின் கழுத்தில் துண்டை போடும் சுஜா வருணி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுஜா வருணி குறித்து சினேகனிடம் அவதூறாக பேசியதை நேருக்கு நேர் பேச காயத்ரி தயாராக இருக்கும்படி சுஜா சவால் விடுத்தது போன்ற வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த நாள் முதல் காயத்ரி பேசிய பேச்சுகள் அப்பப்பா. காயத்ரியின் வாயில் இருப்பது நாக்கா இல்லை தேள் கொடுக்கா என்று யோசிக்கும் அளவுக்கு அவரது பேச்சு இருந்தது.

அனைவரையும் விடாமல் டிரிக்கர் சக்தியுடன் சேர்ந்து டுவிஸ்ட் செய்துவிட்டது முதல் கொண்டு அவர் பங்கேற்ற அத்தனை நிகழ்ச்சிகளும் ரசிகர்கள் முகம் சுளித்து வந்தது. கடைசியில் பேசுவதை எல்லாம் பேசிவிட்டு தனக்கு தமிழில் சிலவற்றுக்கு அவ்வளவாக அர்த்தம் தெரியாது என்றார் பாருங்க கொதித்துவிட்டனர் ஆடியன்ஸ்.

ஜூலியிடம் வம்பு

ஜூலியிடம் வம்பு

முதல் முதலாக மக்கள் செல்வாக்கு கொண்டிருந்த ஜூலியிடம், ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு போனால், ஜல்லிக்கட்டு போராட்டம் மட்டுமே செய்ய வேண்டும். மற்றவர்களை விமர்சிக்கக்கூடாது என்று ஜூலி , மோடியை விமர்சித்தது குறித்து கண்டித்தார்.

சேரி பிஹேவியர்

சேரி பிஹேவியர்

இதைத் தொடர்ந்து ஓவியாவுக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதன் வயிற்றெரிச்சல் காரணமாக அவரை கண்டபடி திட்டி ஒரு கட்டத்தில் சேரி பிஹேவியர் என்றார். இதனால் கமலுக்கு எதிராகவும், காயத்ரிக்கும் எதிராகவும் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அடங்காத காயத்ரி

அடங்காத காயத்ரி

இதைத் தொடர்ந்து ஹேர் என்ற வார்த்தையை பயன்படுத்தினார். மேலும் வாயை திறந்தாலே கூவம் போல் கன்றாவி, சீ போன்ற வார்த்தைகள்தான் அவர் வாயில் இருந்து வந்தன. இதனால் தினம் தினம் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளானார். ஒரு எபிசோடின்போது கமல், காயத்ரியின் ஹேர் வார்த்தைக்கு கண்டித்தும் அடங்காமல் ஆட்டம் போட்டார்.

சுஜா குறித்து அவதூறு

சுஜா குறித்து அவதூறு

புதிய போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த சுஜா வருணியை கட்டி அணைத்து வரவேற்றார் காயத்ரி. ஆனால் அடுத்த கணமே அவரது சுயரூபத்தை சினேகனிடம் காண்பித்தார். சுஜா வருணி ஒரு கலீஜ் என்றும் 6 மடங்கு ஜூலிக்கு சமமானவர் என்றும் தெரிவித்திருத்தார்.

பெண்களை பேசக் கூடாது

பெண்களை கண்டபடி பேசக் கூடாது என்று கூறிவிட்டு பெண்களான ஓவியாவையும் சுஜாவையும் கண்டபடி பேசினார். காயத்ரி பேசியது குறித்து வருணி, சினேகன் மூலம் அறிந்து கொண்டார். இந்நிலையில் கடந்த 15-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் காட்டப்படவுள்ளதாக ஒரு ப்ரோமோ காட்டப்பட்டது. ஆனால் அந்த நிகழ்ச்சியில் இந்த ப்ரமோ மிஸ்ஸாகிவிட்டது. அது இப்போது டுவிட்டரில் வைரலாகி வருகிறது.

காயத்ரிக்கு சவால்

காயத்ரிக்கு சவால்

அந்த வீடியோவில் சுஜா கேமரா முன் பேசுகையில், காய்தரி ரகுராம் உங்களிடம் நான் ஒன்று கேட்க வேண்டும். கலீஜ்ன்னா என்ன. எந்த அர்த்தத்தில் அந்த வார்த்தையை கூறினீர்கள். அந்த வார்த்தை என்னை தொந்தரவு செய்கிறது. உங்களுக்கு எப்படி தமிழில் சில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாதோ. அதேபோல் எனக்கும் சில வார்த்தைகள் தெரியாது. எனவே நீங்கள் விளக்கத்தான் வேண்டும். 100 நாள்கள் கழித்து உங்களை சந்திக்க வருகிறேன். தயாராக இருங்கள் என்று காயத்ரியின் கழுத்தில் துண்டு போட்டு கேட்கும் அளவுக்கு வருணி சென்றுவிட்டார். எது எப்படியோ காயத்ரிக்கு யாராவது கடிவாளம் போட்டால்தான் அவரது வாய் கொழுப்பு அடங்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A Unseen promo video which challenges Gayathri Raguram for her abusive words on Suja Varunee. This video was not involved in the september 14.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற