வா.. ராஜா.. தெருவோர டீக்கடை நமக்காய் தவம் கிடக்கிறது...!
சென்னை: ஒரு பத்து வருடத்திற்குப் பின்னால் போய் பார்த்தால்.. நமக்கெல்லாம் யோசிக்க, பேசிக்க, சிரிச்சிக்க நிறைய நேரம் இருந்தது... அதெல்லாம் இப்போது கனாக் காலம்... பேச நேரமில்லை. சாப்பிட நேரமில்லை. சிரிக்கக் கூட நேரமில்லை.. முழுக்க முழுக்க கம்ப்யூட்டரிலும், இன்டர்நெட்டிலும், சமூக வலைதளங்களிலும் மூழ்கிப் போய் விட்டோம்.
உறவுகளிடையே இடைவெளி ஏகமாகி விட்டது. கணவன், மனைவி கூட பேஸ்புக்கில் ஹாய் ஹாய் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு நிறைய விலகிப் போய் விட்டோம்.. இந்த புதிய உறவால்.
இதை ஒருவர் அனுபவித்து, மனம் நெகிழ்ந்து போய் வாட்ஸ்ஆப்பில் எழுதியுள்ளார். நீங்களும் படித்துப் பாருங்களேன்...

முன் கடந்து போவோரின்
முகம் காண முடியவில்லை.
பின் நின்று சிரிப்போரின்
எண்ணம் எனக்கு புரியவில்லை.
தலை தாழ்ந்தே எங்கும் பயணம்.
தொடுதிரையை தொட்டபடி
உள்ளங்கையில் தான் உலகம்.
என் கைபேசி காதலியானாள்- நான்
கட்டிய மனையாள் நெடுந்தூரம் போனாள்...
உற்றாரும் உறவினரும் Family குரூப்பில்,
நண்பனும் அவனின் நண்பனும் நட்பெனும் குரூப்பில்.
சாமக் கோழி கூவிய பின்னும்,
கொக்கரக்கோ கேட்கும் முன்னும்,
வாட்ஸ்சாப்பில் மூழ்கலானேன் - நிஜமெனும் வசந்தத்தை நிழலாலே மறந்தும் போனேன்.
எவர் எவருக்கோ பிறந்த நாள் வாழ்த்து.. அடுத்தவர் இழப்பிற்கு துக்கச்சேதி.
Hi என எவரோ அனுப்ப
Hai என பதிலுரைத்தேன் - ஏனோ
நான் பெற்ற பிள்ளை
"அப்பா"என்றழைக்க,
சற்றே புருவம் உயர்த்தி
பார்வையாலே சுட்டெரித்தேன்...
அடுத்தவரின்,
Status பார்த்து ரசித்தேன்,
profile பார்த்து வியந்தேன்,
Picture Msg பார்த்து லயித்தேன்,
video பதிவிறக்க ஆர்வத்தில்.
கை அலம்பியபின் யோசித்தேன்.
நான் என்ன சாப்பிட்டேன் என்பதை...
மாமன் வீட்டு மீன் குழம்பு,
மாமி பொறித்த அப்பளம்,
தங்கை வீட்டு தக்காளிச்சோறு,
மதனி சொன்னாள் கூட்டுக்கறி என்று இத்தனையும் மனதில் கொண்டு, நித்தம் நித்தம் சண்டையிட்டேன்,
அமிர்தம் தந்த மனையாளிடம்.
இது நஞ்சை விட கேவலமென்று...
நானாய் சிரித்தேன்,
நானாய் அழுதேன்,
நானாய் வியந்தேன்,
நானாய் ரசித்தேன்-ஏனோ
நான்,
நானாய் மட்டும் இல்லை...
ஆண்ட்ராய்டில் அனைத்தும் உள்ளதென அங்கலாய்த்தேன்.
என் குடும்பம் விலகி போவதை கண்டும் கூட
Network கிடைக்கும் இடம் தேடி அலையலானேன்...
கீமோஜியில் கூட
சிரிப்பு, அழுகை, சோகம், வெட்கம்,
ஆடல், பாடல், குடும்பம், நட்பு என அனைத்தும்.
ஆனால்...
நான் நிமிர்ந்து பார்க்கும் போது
என் முன்னே எவருமில்லை.,
சுற்றமும், நட்பும்
உள்ளங்கை உலகத்தோடு எனை கடந்து போயினர்...
இது வாட்ஸ் ஆப்(பு) உலகம்-போதும்
சொந்தமே.,
இனி என்னோடு நேரினில் புன்னகையிடுங்கள்.
நட்பே., வா தெருவோர டீக்கடை நமக்காய் தவம் தவம் கிடக்கிறது...!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications