முதலில் மீனவர்கள்... இப்போது விவசாயிகள்... கமலின் அடுத்தடுத்த அதிரடிகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கண்டிப்பா தல...நீ சொன்ன பின்னால சும்மா இருப்பமா..?- வீடியோ

  சென்னை: எண்ணூரில் உள்ள வல்லூர் அனல் மின் நிலையத்தின் சாம்பல் கழிவுகள் கொட்டப்படும் இடங்களை பார்வையிட்ட நடிகர் கமல்ஹாசன் தற்போது விவசாயிகளை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்துள்ளார்.

  நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக அரசியலுக்கு வருவது குறித்து தீவிர ஆலோசனையில் உள்ளார். அதற்கு அச்சாரமாக தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்தும் நிர்வாகம் குறித்தும் அவ்வப்போது பேசி வருகிறார்.

  அவர் டுவிட்டரிலேயே கருத்துகளை பதிவிட்டு வந்ததால் தமிழக அமைச்சர்கள் கமலை களத்தில் இறங்கினால்தான் தெரியும் என்று சவால் விட்டனர். அதன் முன்னோட்டமாக டுவிட்டரை விட்டு களத்தில் முதலில் களத்தில் குதிக்க முடிவு செய்தார்.

  எச்சரிக்கை விடுத்த கமல்

  எச்சரிக்கை விடுத்த கமல்

  வடசென்னையில் உள்ள வல்லூர் அனல்மின் நிலையத்தின் சாம்பல் கழிவுகள் கொசஸ்தலை ஆற்றில் கொட்டப்படுவதால் மழை நீர் செல்ல வழியில்லை. இதனால் வடகிழக்கு பருவமழையின்போது வடசென்னைக்கு ஆபத்து என்று டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

  குறைகளை கேட்டறிந்தார்

  குறைகளை கேட்டறிந்தார்

  இந்த டுவிட்டர் பதிவுக்கு அடுத்த நாளே எண்ணூர் துறைமுகத்துக்கு நடிகர் கமல் சென்று அங்கு ஆய்வு நடத்தினார். மேலும் அங்கு வசிக்கும் மீனவர்கள், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இது அரசியல் பிரவேசத்துக்கு அச்சாரமாக பார்க்கப்பட்டது.

  அடுத்த டார்கெட்

  அடுத்த டார்கெட்

  அடுத்தது நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இன்று அடையாற்றில் விவசாய பிரதிநிதிகளை நடிகர் கமல் சந்தித்ததபோது தமிழக அரசை கடுமையாக விமர்சித்தார். அரசியல்வாதிகள் உத்தரவிடுவதிலேயே கவனம் செலுத்துகின்றனர் என்று விமர்சித்திருந்தார்.

  சோறு சேகரிக்கவே இந்த சந்திப்பு

  சோறு சேகரிக்கவே இந்த சந்திப்பு

  விவசாயிகளை தாம் சந்திப்பது வாக்கு சேகரிக்க இல்லை என்றும் சோறு சேகரிக்கவே என்றும் நடிகர் கமல் கூறியிருந்தார். என்னதான் அவர் அவ்வாறு கூறினாலும் நாட்டுக்கு முக்கியமானவர்களான மீனவர்கள், ஏழை மக்கள், விவசாயிகளின் மனதை நடிகர் கமலின் அடுத்தடுத்த நிகழ்வுகள் கொள்ளை கொண்டதாகவே கூறப்படுகிறது.

  அரசியலுக்கு வரும்முன்னர்

  அரசியலுக்கு வரும்முன்னர்

  அரசால் எந்த பலனையும் அனுபவிக்காதவர்கள் என கூறப்படும் இத்தகைய மக்களை நடிகர் கமல் சந்தித்து வருவது அரசியலில் மாற்றம் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ம்ம்ம் கலக்குங்க "சந்துரு"!.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Actor Kamal hassan starts his political entry by meeting farmers and heard their woes. He also blasted politicians.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற