வெள்ளத்தில் நம்மை காப்பது போல், இவர்களையும் காக்க வேண்டும்.. கலங்கிய நடிகர் விவேக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நேற்றில் இருந்து கனமழை பெய்து வரும் சூழ்நிலையில், வெள்ளத்தில் இருந்து நம்மை காப்பது போல் பிற உயிர்களையும் காக்க வேண்டும் நடிகர் விவேக் டிவிட்டரில் கூறியிருக்கிறார். சென்னையில் தொடர்ந்து இன்னும் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளதால், மக்கள் சிறிய விலங்குகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கி இருக்கிறது. இதையடுத்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மிகவும் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று காலையில் இருந்து கடுமையான மழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்த மோசமான மழை காரணமாக சில இடங்களில் சிறிய அளவில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது.

Actor Vivek shows concerns about animals in twitter

தாம்பரம், வியாசர்பாடி போன்ற பகுதிகளில் உள்ள சாலைகளிலும், வீட்டுக்களுக்கும் வெள்ளம் சென்று இருக்கிறது. மேலும் பல இடைகளில் மின்சாரம் இல்லாததால் மக்களின் இயல்பு வாழ்க்கையே மொத்தமாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது. பல ஏரிகள் நிரம்பி இருப்பதால் சென்னையை வெள்ள அபாயம் சூழ்ந்துள்ளது.

மேலும் சென்னையில் இன்னும் 5 நாட்களுக்கு தொடர்ச்சியாக கடுமையான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது. இதையடுத்து டிவிட்டரில் சிறப்பாக இயங்கி வரும் நடிகர் விவேக் இந்த மழை குறித்து பேசியிருக்கிறார். இவர் சென்னையில் வெள்ளம் வந்த போது களத்தில் இறங்கி வேலை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதில் ''வெள்ளத்தில் நாம் கஷ்டப்படுவது போல சிறிய சிறிய ஆதரவு இல்லாத விலங்குகளும் கஷ்டப்படும். அவற்றை எல்லாம் பத்திரமாக பாதுகாத்து ஆதரவு அளிக்க வேண்டும்'' என்று கூறியிருக்கிறார். இவரது இந்த இளகிய மனதிற்கு டிவிட்டரில் அதிகமான வரவேற்பு கிடைத்து இருக்கிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Vivek shows concerns about animals in twitter. He says that we should take care of dogs and some other animals from the flood.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற