சமரசமாகிறார்கள் வடிவேலுவும், சிங்கமுத்துவும்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நிலமோசடி வழக்கில் நடிகர்கள் வடிவேல் மற்றும் சிங்கமுத்து ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராயினர். சமரச முடிவை நீதிமன்றத்தில் இருவரும் தெரிவிக்கவுள்ளனர்.

கடந்த 2010 ஆம் ஆண்டு தாம்பரம் இரும்புலியூர் அருகே நிலம் வாங்கியதில் தன்னை ஏமாற்றியதாக, மத்தியக் குற்றப்பிரிவில் சிங்கமுத்து உள்ளிட்ட 6 பேர் மீது நடிகர் வடிவேல் புகார் அளித்தார். இந்தப் புகார் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்த செய்க்கோரி சம்பந்தப்பட்ட அனைவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

Actors Vadivel and Singamuthu appeared in the Chennai high court on the land issue

இந்த வழக்கில் நடிகர்கள் வடிவேல் மற்றும் சிங்கமுத்து ஆகியோர் நேரில் ஆஜராக நீதிமன்றம் ஏறகனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால் இருவரும் ஆஜராகததால் அந்த வழக்கு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இன்றைய தினம் இருவரும் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி எம்வி முரளிதரன் உத்தரவிட்டிருந்தார். இருவரும் ஆஜராகவிட்டால் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதி எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். அவர்கள் தங்களின் சமரச முடிவை நீதிமன்றத்தில் தெரிவிக்கவுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actors Vadivel and Sigamuthu appeared in the Chennai high court on the land issue. they are going to compramise in this issue.
Please Wait while comments are loading...