ரேசன்கடை ஸ்மார்ட் கார்டில் காஜல் அகர்வால் படம்... சேலத்தில் அதிர்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ரேசன்கடை ஸ்மார்ட் கார்டில் காஜல் அகர்வால் படம்... சேலத்தில் அதிர்ச்சி-வீடியோ

  சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரம் பகுதியில் ஸ்மார்ட் கார்டில் பிரபலமான சினிமா நடிகை காஜல் அகர்வால் படத்தை அச்சிட்டு கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  தமிழக அரசு வழங்கிய ஸ்மார்ட் கார்டுகளில், குடும்பத்தலைவர்களின் படத்துக்குப் பதிலாக நடிகர்- நடிகைகளின் படங்களும் மரங்கள், மண்மேடுகளின் படங்கள் இருப்பதாகவும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், 'இது தவறு மட்டுமல்ல, வெட்கப்படவேண்டிய கேலிக்கூத்தும்கூட என்று கூறியிருந்தார்.

  Actress Kajal Agarwal images in Ration shop Smart card

  தமிழகத்தில், காகிதத்தால் ஆன குடும்ப அட்டைகள் கடந்த 2005-ஆம் ஆண்டு வழங்கப்பட்டன. அவை 2010-ம் ஆண்டு புதுப்பித்து வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், போலி அட்டைகளை ஒழிப்பதற்கான கணக்கெடுப்பு நடத்த வேண்டியிருப்பதாகக் கூறி, அப்போது புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படவில்லை.

  அதன்பின்னர் 2014-ம் ஆண்டு ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டபோதிலும், அவை அறிவிப்புகளாகவே இருந்துவிட்டன. நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதத்துக்குள் ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காலக்கெடு முடிந்த பிறகும் பாதிக்கும் சற்று கூடுதலானவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கின்றன.

  ஓமலூரை அடுத்த காமலாபுரம் ஊராட்சி ஆர்.சி.செட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் சரோஜா (42)இவரது கணவர் பெரியசாமி இவர்களுக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்னர் குடும்ப அட்டைக்கு பதில் ஸ்மார்ட் கார்ட் வருவாய் துறையில் இருந்து வந்தது.

  இதில் சரோஜாவின் பெயர் அவரது கணவர் பெயர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெயர்கள் உள்ளது. ஆனால் சரோஜாவின் படத்திற்கு பதில் பிரபலமான சினிமா நடிகை காஜல் அகர்வால் படம் இடம் பெற்று உள்ளது.

  இதனை பார்த்த சரோஜா குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து உள்ளனர். ரேசன் கார்டு,வாக்காளர் அட்டையில் தான் குழப்பம் என்றால் ஸ்மார்ட் கார்டிலும் புகைப்படம் குழப்பம் உருவாகி உள்ளது அதிர்ச்சியடைய செய்துள்ளது.

  அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்தும் இன்னமும் தவறுகள் திருத்தப்படாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Ration cards in Tamil Nadu are all set to go fully digital smart family card scheme to replace 1.89 crore cards in the state at a cost of Rs 330 crore. Cine actress face is replace to family leader photo in Omalur salem district.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற