பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் ஓவியா! ரசிகர்கள் ஏமாற்றம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து நடிகை ஓவியா வெளியேறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த நடிகை ஓவியா சக குடும்ப உறுப்பினர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார். நெருக்கமாக பழகிய ஆரவும் தான் காதலிக்கவில்லை எனக் கூறி ஓவியாவை ஓரம் கட்டினார்.

Actress Oviya left the Biggboss house

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ஓவியா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவதாக கூறினார். ஆனால் பிக்பாஸ் அனுமதிக்காததால் நேற்றைய எபிசோடில் தற்கொலைக்கு முயன்றார்.

பிக்பாஸ் வீட்டில் அமைக்கப்பட்டிருந்த நீச்சல் குளத்தில் மூழ்கி அவர் தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவரை வெளியேறுமாறு பிக்பாஸ் கூறியதையடுத்து ஓவியா பிக்பாஸ் வீட்டில் இருந்து ஓவியா வெளியேறினார்.

அந்த காட்சிகள் இன்றைய எபிசோடில் அதிகாரப்பூர்வமாக காட்டப்பட்டன. தன்னை காயப்படுத்தியவர்களை அருகில் நெருங்க விடாமால் யாருடைய உதவியும் தேவையில்லை எனக்கூறி தனது துணிமணிகளை பேக் செய்த ஓவியா பிக்பாஸ் வீட்டிலிருந்து புறப்பட்டார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actress Oviya left the Biggboss house. After She committed suicide attempt biggboss sent her out from the Biggboss house.
Please Wait while comments are loading...