கல்யாணமாம் கல்யாணம்... சூர்யாவுக்கு அம்மாவான நாதஸ்வரம் மலர்!
Recommended Video

சென்னை: உயரம் குறைந்த இளமையான தோற்றம் கொண்டவரான ஸ்ரித்திகா, கல்யாணமாம் கல்யாணம் சீரியலில் ஹீரோ சூர்யாவுக்கு அம்மாவாக அதிரடி எண்ட்ரி கொடுத்திருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி, தற்போது சின்னத்திரையில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் ஸ்ரித்திகா. பிரேமம் மலர் டீச்சரைப் போலவே, தனது நாதஸ்வரம் சீரியலில் மலர் கதாபாத்திரம் மூலம் பிரபலமானவர் இவர்.
நாதஸ்வரம் சீரியலைத் தொடர்ந்து, குலதெய்வம் சீரியலில் நடித்தவர், தற்போது விஜய் டிவியின் கல்யாணமாம் கல்யாணம் சீரியலில் நடித்து வருகிறார்.

விஜய் டிவி சீரியல்:
விஜய் டிவியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது கல்யாணமாம் கல்யாணம் சீரியல். தேஜா நாயகனாகவும், ஸ்ரீத்து நாயகியாகவும் நடித்துள்ள இத்தொடரை பிரம்மா இயக்கி வருகிறார். ஆர்.சுந்தர்ராஜன் மற்றும் மௌலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

குடும்பக்கதை:
காதல், குடும்பம், பாசம், எதிர்ப்பு என உணர்ச்சிகளின் கலவையாக உள்ள இந்தச் சீரியலுக்கு ரசிகர்கள் ஏராளம். இளமையான காதல் கதையை குடும்பப் பின்னணியில் சொல்லி இருப்பதே இந்த சீரியலின் வெற்றிக்கான காரணம்.

திடீர் திருப்பங்கள்:
சூர்யா, கமலி காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு, இருவருக்கும் வேறு வேறு இடங்களில் திருமண ஏற்பாடு, இதற்கிடையே சூர்யாவின் அம்மாவிற்கு திடீர் ஹார்ட் அட்டாக், சூர்யா-கமலி திடீர் திருமணம் என பரபரப்பாக சீரியல் சென்று கொண்டிருக்கிறது.

ஸ்ரித்திகாவின் வரவு:
ஏற்கனவே சீரியலின் அதிரடி திருப்பங்களால் சுவாரஸ்யமான ரசிகர்களுக்கு, நேற்று திடீர் இன்ப அதிர்ச்சியாக அமைந்தது நாதஸ்வரம் ஸ்ரித்திகாவின் திடீர் வரவு. சூர்யாவின் அம்மா கதாபாத்திரத்தில் இனி இவர் தான் நடிக்க இருக்கிறார்.

இளமையான அம்மா:
முன்பு சூர்யாவுக்கு அம்மாவாக நடித்தவரே நன்கு இளமையுடன் தான் இருந்தார். இந்நிலையில், சூர்யாவுக்கு தங்கை என்று சொன்னால் நம்பி விடலாம் என்றிருக்கும் 31 வயது ஸ்ரித்திகாவை, சூர்யாவுக்கு அம்மாவாக்கி இருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வெயிட் அண்ட் ஸீ;
அதோடு முன்பு சூர்யாவின் அம்மாவாக நடித்தவர் தனி மிடுக்கோடு காணப்பட்டார். அந்த மிடுக்கான தோற்றம், மென்மையான ஸ்ரித்திகாவிடம் தொடருமா என்பது சந்தேகமே. எனவே, ஸ்ரித்திகாவின் இந்த திடீர் வரவு இனி வரும் காட்சிகளில் எடுபடுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications