ஒருநாள் மழைக்கே அடையாற்றை தெறிக்க விட்ட வெள்ளம்... தரைப்பாலம் மூழ்கும் அபாயம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் ஒருநாள் பெய்த மழைக்கே ஈக்காட்டுதாங்கல் காசி தியேட்டர் தரைப்பாலத்தை உரசிக்கொண்டு வெள்ளநீர் செல்கிறது.

சென்னையில் நேற்று விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் மட்டுமல்லாது மேடான பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

Adayar river flood near Kasi Theator Chennai

ஈக்காட்டுத்தாங்கலில் காசி தியேட்டர் அருகே தரைப்பாலத்தை அடையாற்றில் வெள்ள நீர் உரசிக்கொண்டு செல்கிறது. தாமரை இலை சூழ்ந்துள்ளதால் அவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தரைப்பாலம் முழ்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Adayar river flood near Kasi Theator Chennai

கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதியன்று சென்னையை வெள்ளம் சூழ்ந்தது. அப்போது அடையாறு வெள்ளம் பொங்கியதில் ஈக்காட்டுதாங்கலில் பல பகுதிகள் மூழ்கியது.

Adayar river flood near Kasi Theator Chennai

இந்த ஆண்டு ஒருநாள் மழைக்கே வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் அடுத்தடுத்து வரும் மழையை நினைத்து அச்சமடைந்துள்ளனர் பொதுமக்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chennai Adyar river overflows at Kasi theatre, Ekkatuthangal in Chennai.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற