For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீட்டுக்கு வந்து "ஜெராக்ஸ் காப்பி" கொடுங்க.. வெள்ள பாதிப்புக்குள்ளான மக்களுக்கு அதிமுகவினர் "உத்தரவு

Google Oneindia Tamil News

சென்னை: வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மக்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரண உதவிகள் கண்டிப்பாக உருப்படியாக போய்ச் சேராது என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. அந்தந்த பகுதி அதிமுகவினர் இந்த வெள்ள நிவாரண கணக்கெடுப்புப் பணிகளை தங்களது கையில் எடுத்து வருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையாக உதவிகள் போகுமா என்பது சந்தேகமாகியுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் நி்வாரண உதவிகளை அறிவித்தார். குடிசைகளை இழந்தோர், நிரந்தர வீடுகளைச் சேர்ந்தோர் என இரு பிரிவாக பிரித்து நிவாரண உதவிகளை அவர் அறிவித்துள்ளார்.

ADMK cadres involve in flood relief assistance works

இந்த நிவாரணப் பணிகளுக்கு முன்பாக அதுகுறித்த கணக்கெடுப்பை வருவாய்த்துறையினர் மேற்கொண்டுள்ளனர். நேற்று முதல் இது தொடங்கியுள்ளது.

ஆனால் இது முறைப்படி நடக்குமா, நடக்கிறதா என்பது சந்தேகமாகியுள்ளது. காரணம் பல பகுதிகளில் அந்தந்த பகுதி அதிமுகவினரே மக்களிடம் கணக்கெடுப்பை நடத்த ஆரம்பித்துள்ளனர். வருவாய்த்துறையினரை ஓரம் கட்டி விட்டு நாங்களே டீட்டெய்ல் வாங்கித் தர்றோம் நீங்க ஒதுங்கிக்ங்க என்று கூறி வருகின்றனர்.

ரேஷன் கார்டு, வங்கிக் கணக்குப் புத்தகத்தின் ஜெராக்ஸ் காப்பியை இவர்களே கலெக்ட் செய்ய ஆரம்பித்துள்ளனர். அவர்களே பார்மையும் பில் செய்கின்றனர். பல இடங்களில் லோக்கல் அதிமுகவினர் தங்களது வீடுகளுக்கு வந்து இவற்றைக் கொடுக்குமாறு மக்களிடம் கூறி வருகின்றனராம்.

இதையெல்லாம் பார்த்தால் பாதிக்கப்பட்ட மக்களில் பாதிப் பேருக்கு முழுமையாக உதவிகள் போய்ச் சேராது என்பது மட்டு் தெளிவாகத் தெரிகிறது.

English summary
ADMK cadres are started involving in flood relief assistance works and people are highly disappointed over this development.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X