இடிக்கு மேல் இடியாக மாதாந்திர பஸ் பாஸ் கட்டணமும் உயர்வு : ஸ்டாலின் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை : பேருந்து கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு தற்போது மாதாந்திர மற்றும் தினசரி பஸ் பாஸ் கட்டணத்தையும் உயர்த்தியுள்ளதற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு கடந்த ஜனவரி 20ம் தேதி பேருந்து கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது. இந்த திடீர் கட்டண உயர்வால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதற்காக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்தன.

ADMK Government should get back the bus fare hike says Stalin

இந்நிலையில், மாதாந்திர மற்றும் தினசரி பஸ் பாஸ் கட்டணமும் உயர்த்தப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாதம் 1000 ரூபாய்க்கு இருந்த மாதாந்திர பாஸ் கட்டணம் தற்போதூ 1300 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. அதுபோல தினசரி பாஸ் கட்டணமும் உயர்த்தப்பட்டு உள்ளதாக நேற்று அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் இதுகுறித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறுகையில், தமிழக அரசின் இந்த கட்டண உயர்வு நடவடிக்கை தமிழக மக்களுக்கு இடிக்கு மேல் இடியாக அமைந்துள்ளது. மக்களை வதைக்கும் இந்த கட்டண உயர்வு கண்டனத்திற்கு உரியது. இந்த கட்டண உயர்வை அதிமுக அரசு திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
ADMK Government should get back the bus fare hike says DMK Leader Stalin. Earlier Government have also increased that the Monthly and Daily Bus pass Rates which actually affects the Common People.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற