For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடுத்தடுத்து "குதிக்கும்" நடிகர்கள்.. திடீரென டெல்லி போகும் ஓபிஎஸ் பயணத்தின் பின்னணி என்ன?

நடிகர் கமல் அடுத்த மாதத்தில் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ள நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவசரமாக டெல்லி பயணம் செல்வது அரசியல் களத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    நடிகர்களின் அரசியல் பிரவேசம்.... ஓ.பி.எஸ். திடீரென டெல்லி செல்வதன் பின்னணி என்ன ?

    சென்னை : ஆர்கே நகர் தேர்தல் தோல்வி, அரசியல் களம் இறங்கும் நடிகர்கள் என்று அதிமுக நெருக்கடியில் இருக்கும் நிலையில் இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவசர பயணமாக இன்று டெல்லி செல்வது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓகி புயல் பாதிப்பின் போது நிவாரணம் கோரக் கூட டெல்லி போகாத ஆட்சியாளர்கள் இப்போது ஏன் பிரதமரை சந்திக்கச் செல்கிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.

    அதிமுக அணிகள் பிளவுபட்டிருந்த சமயத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை என டெல்லி சென்று பிரதமரை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். ஆனால் இருவருமே சொன்ன காரணம் தமிழக பிரச்னைகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்ததாக கூறினர்.

    கடைசியாக டெல்லி பயணம்

    கடைசியாக டெல்லி பயணம்

    குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவியேற்பு நிகழ்ச்சிக்காக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் டெல்லி சென்றனர். இரு அணிகள் இணைப்பிற்கு அதுவே கடைசியாக பாஜக கெடு விதித்த சந்திப்பாக இந்த பயணம் பார்க்கப்பட்டது. இதற்கு ஏற்றாற் போல ஆகஸ்ட் மாதத்திலேயே இரு அணிகளும் இணைந்தன.

    ஓய்ந்திருந்த டெல்லி பயணம்

    ஓய்ந்திருந்த டெல்லி பயணம்

    இரண்டு அணிகள் இணைந்த பின்னர் ஓ.பிஎஸ், ஈபிஎஸ் டெல்லி பயணம் என்பது பெரிய அளவில் இல்லை. ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையான பாதிப்பை சந்தித்த போது கூட நிவாரணம் கேட்க தமிழக ஆட்சியாளர்கள் செல்லவில்லை என்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. மாறாக புயல் பாதிப்புகளை பார்வையிட வந்த பிரதமரை கன்னியாகுமரியில் சந்தித்து நிவாரணம் கோரும் மனுவை அளித்துவிட்டு ஆட்சியாளர்கள் அமைதி காத்தனர்.

    சரியும் அதிமுக செல்வாக்கு

    சரியும் அதிமுக செல்வாக்கு

    ஆர்கே நகர் தேர்தலில் அதிமுக படுதோல்வியடைந்தது, பாஜகவும் சரிவை சந்தித்தது டெல்லி மேலிடத்தால் உற்று நோக்கப்பட்டு வருகிறது. ஆர்கே நகர் வெற்றிக்குப் பிறகு தினகரனின் அணுகுமுறை மேலும் தனிக்கட்சித் தொடங்க ஆயத்தமாகும் தினகரன் என்று அதிமுகவிற்கு நெருக்கடி மேல் நெருக்கடி நிலவுகிறது.

    நெருக்கடியில் அதிமுக

    நெருக்கடியில் அதிமுக

    மற்றொரு புறம் இந்தியா டுடே கார்வி நடத்திய கருத்துக்கணிப்பிலும் அதிமுகவின் செல்வாக்கு சரிந்து விட்டதாக மக்களின் கருத்துகள் பிரதிபலிக்கின்றன. அரசை டுவிட்டரில் கடுமையாக விமர்சித்து வரும் நடிகர் கமல்ஹாசன் அடுத்த மாதம் 21ம் தேதி அரசியல் கட்சியை அறிவிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

    திடீர் டெல்லி பயணம்

    திடீர் டெல்லி பயணம்

    அதிமுகவின் செல்வாக்கு ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு சரிந்தாலும் பாஜகவின் கரிசனப் பார்வையால் அதிமுகவின் சின்னமும், பெயரும் ஓ.பிஎஸ், ஈபிஎஸ் அணிக்கு கிடைத்தது. ஆனால் அண்மைக் காலமாக நடைபெறும் அரசியல் நிகழ்வுகள் யாவும் அதிமுகவிற்கு எதிராகவே இருக்கும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அவசரமாக டெல்லி செல்வது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    English summary
    As ADMK is in critical political condition because of RK Nagar elecction result and Kamalhaasan, Rajinikanth's political entry Deputy CM O. Paneerselvam rushing to Delhi urgently today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X