ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் : திருச்சி சிவா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளும் அதிமுகவுக்கு மக்கள் தக்கம் பாடம் புகட்டுவார்கள் என திமுக எம்பி திருச்சி சிவா குற்றம்சாட்டியுள்ளார். அமைச்சர்கள் தங்கள் பதவியை காப்பாற்றிக் கொள்வதில் தான் கவனமாக இருப்பதாகவும் திருச்சி சிவா தெரிவித்தார்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினரான திருச்சி சிவா சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அதிமுக அமைச்சர்கள் மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.

ADMK Ministers are bothering about their posting : Trichy Siva

அதிமுக அமைச்சர்கள் தங்கள் பதவியை காப்பாற்றி கொள்வதில்தான் கவனமாக உள்ளனர் என்றும் திருச்சி சிவா சாடினார். அதிமுக அரசுக்கு மீனவர் விவகாரம் நீட் தேர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளில் அக்கறையில்லை என்றும் எம்பி திருச்சி சிவா தெரிவித்தார்.

மேலும் ஆர்கே.நகர் தொகுதியில் அதிமுக வெற்றி என்பது கற்பனையே என்று கூறிய திருச்சி சிவா, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் தக்கப் பாடம் புகட்டுவார்கள் என கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK MP Trichy siva accusing that ADMK Ministers are bothering about their posting. People will teach lesson in the RK Nagar by election.
Please Wait while comments are loading...