சசிகலாவை சந்திக்க பெங்களூரு சிறைக்கு விரையும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுக பொதுக்குழு நாளை கூட உள்ள நிலையில் சசிகலாவை அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேர் இன்று பெங்களூரு சிறைக்கு சென்று சந்திக்க உள்ளனர்.

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தற்போது கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் குஷால் நகரில் உள்ள தனியார் சொகுசு விடுதி ஒன்றில் தற்போது முகாமிட்டுள்ளனர்.

ADMK MLAs to meet Sasikala today

இவர்களில் தங்கத்தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 3 எம்எல்ஏக்கள் பெங்களூருவில் பரப்பன அக்ராஹார சிறையில் உள்ள சசிகலாவை இன்று சந்திக்கின்றனர்.

  சசியின் கணவர் நடராஜன் உடலில் என்ன பிரச்சினை?-வீடியோ

  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் அணியினர் இணைந்த பின்னர் நாளை அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த உள்ளனர்.

  இதனிடையே பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்எல்ஏ வெற்றிவேல் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது. பொதுக்குழு நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்து வெற்றிவேல் எம்எல்ஏவின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

  எனவே திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  3 ADMK MLAs are all set to meet Sasikala in Bangalore jail today.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற