அடிச்சுக் கூட கேப்பாரு, அப்பவும் பேசிராதீங்க.. தினகரனை குறுக்கீடு செய்ய அதிமுக எம்எல்ஏக்களுக்கு தடை

Posted By:
Subscribe to Oneindia Tamil
அதிமுக எம்.எல்.ஏ கூட்டம்...வீடியோ

சென்னை: சட்டசபையில் தமிழக அரசை தினகரன் விமர்சித்து பேசினால் அதிமுக எம்.எல்.ஏக்கள் குறுக்கிட கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

டிடிவி தினகரன் ஆர்.கே நகர் தொகுதியில் வெற்றி பெற்று இருக்கிறார். இன்னும் சில நாட்களில் நடக்கும் சட்டசபை கூட்டத்தில் அவர் கலந்து கொள்வார்.

ADMK MLAs should not interrupt TTV- EPS

இந்த சட்டசபை கூட்டம் குறித்தும் கட்சி செயல்பாடுகள் குறித்தும் அதிமுக கூட்டத்தில் இன்று விவாதிக்கப்பட்டது. முதல்வர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

அதன்படி ''சட்டசபையில் தமிழக அரசை தினகரன் விமர்சித்து பேசினால் அதிமுக எம்.எல்.ஏக்கள் யாரும் அவரை குறுக்கிட கூடாது என்று முடிவாகி இருக்கிறது. மேலும் அங்கு அரசு கொறடா சொல்வதை கேட்டு நடக்க வேண்டும்'' என்றும் முதல்வர் கூறியிருக்கிறார்.

மேலும் சட்டசபையில் கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் இந்த கூட்டத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilnadu CM Edppadi Palanisami in ADMK meeting says that ''ADMK MLAs should not interrupt TTV Dinakaran in assembly if he talks against Tamilnadu government''.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற