சசிகலா குடும்பத்தை எதிர்க்க வியூகம்- அதிமுக பொதுச்செயலராகிறார் ஓபிஎஸ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் பொதுச்செயலராக ஓபிஎஸ்ஸை நியமித்து சசிகலா குடும்பத்தின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் எடப்பாடி தரப்பு படுதீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.

அ.தி.மு.கவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக, சசிகலா குடும்ப உறவுகள் ஒன்றாக கை கோர்த்துவிட்டனர். அந்தக் குடும்பத்தை அடியோடு ஒதுக்கி வையுங்கள் என ஓபிஎஸ் அணியின் முனுசாமி, மைத்ரேயன் உள்ளிட்டவர்கள் வைத்த கோரிக்கையை முதலில் எடப்பாடி தரப்பினர் ஏற்கவில்லை.

ஆட்சி அதிகாரத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாமலும், யாரைப் பற்றியும் குறை சொல்லாமலும் மௌனமாகவே ஆட்சியை நடத்தி வந்தார் எடப்பாடி பழனிசாமி. ஓபிஎஸ்ஸின் தர்மயுத்தமும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.

பேச்சுவார்த்தை மும்முரம்

பேச்சுவார்த்தை மும்முரம்

இந்நிலையில் தினகரனின் நடவடிக்கைகளால் ஏற்படும் குழப்பத்தைத் தவிர்க்க, ஓபிஎஸ் அணியுடனான பேச்சுவார்த்தையில் மும்முரமாக இறங்கியிருக்கிறது கொங்கு அ.தி.மு.க. ஆட்சிக்கு எந்தவித சிக்கலும் இல்லை என்பதை தெளிவாக உணர்ந்து வைத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி.

ஓபிஎஸ் வசம் கட்சி

ஓபிஎஸ் வசம் கட்சி

அமைச்சர்கள் தன்னைத் தேடி வர வேண்டும் என எதிர்பார்த்தார் தினகரன். அவரது எதிர்பார்ப்பு வீணாகிவிட்டது. சசிகலா குடும்ப உறுப்பினர்கள் பெயரை எந்த இடத்திலும் எடப்பாடி சொல்வதில்லை. தொடக்கத்தில் இருந்தே கட்சி அதிகாரம் ஓபிஎஸ்ஸிடமும் ஆட்சி அதிகாரம் எடப்பாடியிடமும் இருக்கட்டும் என வலியுறுத்தி வந்தார் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி.

முதல்வர் பதவியும்...

முதல்வர் பதவியும்...

ஆனால், பேச்சுவார்த்தையின்போது, முதல்வர் பதவியும் முக்கிய இலாகாக்களும் வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு நெருக்கடி கொடுத்ததால் பேச்சுவார்த்தை இழுத்துக் கொண்டே போனது. ஆனால், தற்போது சசிகலா குடும்பத்தின் ஆதிக்கத்தை ஓரம்கட்ட பன்னீர்செல்வம் உள்ளே வர வேண்டியதன் அவசியத்தை அதிமுக சீனியர்கள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.

பொதுச்செயலராகும் ஓபிஎஸ்

பொதுச்செயலராகும் ஓபிஎஸ்

கட்சி விதிகளைத் தளர்த்தி பொதுச் செயலாளர் பதவியை ஓபிஎஸ்-க்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. இந்தக் கோரிக்கைகளை முழு மனதோடு முதல்வர் எடப்பாடி ஏற்றுக் கொள்வாரா என்பதைப் பொறுத்தே அடுத்தகட்ட காட்சிகள் அரங்கேறுமாம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sources said that O Panneerselvam will be as new General Secretary of ADMK Party.
Please Wait while comments are loading...