For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உப்பு போட்டுச் சாப்பிடலை, வெட்கமா இல்லை, உரைக்கலை.. அதிமுக பெண் தொண்டரின் ஆவேசம்!

சென்னையில் சசிகலாவுக்கு எதிராக அதிமுகவினர் நடத்திய போராட்டத்தின்போது அதிமுக பெண் தொண்டர் ஒருவர் ஆவேசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை நியமித்ததை எதிர்த்து சென்னை வானகரம் பகுதியில் நடந்த அதிமுகவினரின் போராட்டத்தின்போது பெண் ஒருவர் படு ஆவேசமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

வானகரத்தில் இன்று அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. அதில் சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தனர். இதற்கு அதிமுக தொண்டர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.

பொதுக்குழு நடந்த பகுதியில் திரளான அதிமுகவினர் கூடி போராட்டம் நடத்தினர். அப்போது வில்லிவாக்கம் பகுதி அதிமுக மகளிர் அணித் தலைவி அஜிதா என்பவர் படு ஆவேசமாக அதிமுக நிர்வாகிகளை விமர்சித்துப் பேசினார். இதுதொடர்பாக சன் செய்திகளுக்கு அவர் அளித்த பேட்டியின்போது கூறியதாவது:

ஆம்பளையா இருந்தா

சரியான ஆம்பளையா இருந்தா தனியா நின்னு ஜெயிச்சுட்டு வாங்க. அம்மா கொடுத்த பதவியை ராஜினாமா பண்ணிட்டு தனியா நின்னு ஜெயிங்க பார்ப்போம்.

அம்மா கொடுத்த பதவி இது

அம்மா கொடுத்த பதவி இது

தைரியம் இருந்தா, ஆம்பளையா இருந்தா உங்க பதவியை ராஜினாமா பண்ணுங்க. அம்மா கொடுத்த பதவியை ராஜினாமா பண்ணிட்டு தனியா நின்னு ஜெயிச்சுட்டு வாங்க.

மணி அடிச்சு சாமி கும்பிடறீங்க

மணி அடிச்சு சாமி கும்பிடறீங்க

அதுக்கெல்லாம் அருகதை இல்லைல்ல. அம்மா கொடுத்த பதவியைக் காப்பாத்திக்கிறதுக்காக யாருக்கோ மணி அடிச்சு கும்பிடறீங்க. வெட்கமா இல்லை.

உணர்வு வேணாம்

உணர்வு வேணாம்

வீட்டில் அம்மா செத்தா, 90 நாள் துக்கம் அனுசரிக்க வேண்டாம். பொட்டச்சிங்க நாங்க தலையில் பூ வைக்காம இருக்கோம். அந்த உணர்வு கூட உங்களுக்கு இல்லை.

உப்பு போட்டுச் சாப்பிடலை

உப்பு போட்டுச் சாப்பிடலை

உப்பு போட்டுச் சாப்பிடலை நீங்க. உரைக்கலை உங்களுக்கு. ரத்தம் துடிக்குது எங்களுக்கு என்று அவர் ஆவேசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
Number of ADMK women cadres agitated against Sasikala after her appointment of new General secretary of the party in Vellore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X