For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

5 மாதங்களில் 2 விருதுகளை வழங்கி கமல் ஹாஸனை கவுரவித்த பிரான்ஸ் அரசு

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: உலக நாயகன் கமல் ஹாஸனுக்கு ஹென்றி லாங்லாய்ஸ் விருது வழங்கி அழகு பார்த்த பிரான்ஸ் அரசு தற்போது செவிலாயே விருது அளித்து கவுரவப்படுத்தியுள்ளது.

4 வயதில் களத்தூர் கண்ணம்மா படம் மூலம் திரையலகிற்கு வந்தவர் கமல் ஹாஸன். எம்.ஜி.ஆர்., சிவாஜி உள்ளிட்ட ஜாம்பவான்களுடன் நடித்து அவர்களின் ஆசி பெற்றவர். முதல் படத்திற்காக 4 வயதிலேயே ராஷ்ட்ரபதி விருது வாங்கியவர்.

After Langloise, France honours Kamal with Chevalier

படத்திற்கு படம் வித்தியாசம் காட்டுவதில் பேரார்வம் கொண்ட அவரின் கலை சேவையை பாராட்டி பிரான்ஸ் அரசு கடந்த ஏப்ரல் மாதம் அவருக்கு லாங்லாய்ஸ் விருது வழங்கி கவுரவித்தது.

பிரெஞ்சு சினிமாவின் பிதாமகர்களில் ஒருவராக போற்றப்படும் ஹென்றி லாங்லாய்ஸின் நினைவாக வழங்கப்படுவது தான் லாங்லாய்ஸ் விருது. இந்நிலையில் கமலுக்கு பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியே விருது கிடைத்துள்ளது.

இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. திரைத்துறையில் கமல் செய்துள்ள சாதனைகளை பாராட்டி அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. சிறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்து விருது வழங்கப்படும் என்று பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.

English summary
France government which had honoured Kamal Haasan with Langloise award in April has announced Chevalier for him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X