கமலின் பாதுகாப்பு பணியில் முன்னாள் ஐ.ஜி. ஏஜி மவுரியா.. தனி படை உருவாக்கப்பட்டது!

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் அரசியல் மாநாடு மற்றும் பயணத்தின் பாதுகாப்பு பணியை முன்னாள் ஐ.ஜி. ஏஜி மவுரியா கவனித்துக் கொண்டு இருக்கிறார். இதற்காக தனி படையும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
நடிகர் கமல்ஹாசன் ஜனவரி மாதம் 16ம் தேதி இரவு தன்னுடைய அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். இன்று தமது கட்சிப் பெயரை அறிவித்து சுற்றுப்பயணத்தை தொடங்க இருக்கிறார்.
ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் வீட்டிலிருந்து அரசியல் பயணத்தை தொடங்க இருக்கிறார். அவர் இன்று மதுரையில் அரசியல் மாநாடும் நடத்த உள்ளார்.

தலைமை
பாதுகாப்பு பணியின் தலைமை பொறுப்பை முன்னாள் ஐ.ஜி.ஏஜி மவுரியா கவனித்துக் கொண்டு இருக்கிறார். இதற்காக இவர் கமல் மதுரை செல்வதற்கு முன்பே சென்று இருக்கிறார். அங்கு இருந்து மதுரையில் விழா நடக்கும் இடம், கலாம் இல்லம் என அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு குறித்த ஏற்பாடுகளை செய்வார்.

யார் இவர்
ஏஜி மவுரியா முன்னாள் ஐபிஎஸ். இவர் தமிழ்நாடு பிரிவு ஐபிஎஸ் ஆவார். சென்னையை பூர்வீகமாக கொண்ட இவர் ஐ.ஜியாக பணியாற்றி இருக்கிறார்.

பலத்த பாதுகாப்பு
இதேபோல் பாதுகாப்பு பணியில் இரண்டு ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் முக்கிய பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிடுவார்கள். அதேபோல் 20க்கும் அதிகமான தனியார் பாதுகாப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

மக்களை சந்திக்கிறார்
இன்று கமல் மக்களை சாலைகளில் சந்திக்க இருக்கிறார். இதனால் மேற்பக்கம் திறக்க கூடிய கார் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த காரில் உட்பக்கம், வெளிப்பக்கம் என மொத்தம் 4 கேமராக்கள் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டு இருக்கிறது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!