For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நகர்மன்றத் தலைவராக இருந்து நீலகிரி எம்.பி.வேட்பாளரான சி.கோபாலகிருஷ்ணன்

By Mayura Akilan
|

நீலகிரி: நீலகிரி தனி தொகுதியின் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோபாலகிருஷ்ணன் குன்னூர் நகரமன்றத் தலைவராக இருக்கிறார்.

உள்ளாட்சித்துறையில் பதவி வகித்த இவர் எம்.பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஓட்டுப்பட்டறை பகுதியை சேர்ந்தவர் சி. கோபாலகிருஷ்ணன்.

இவரது தந்தை பெயர் சின்னராஜ். தாய் பெயர் லோகம்மாள். மனைவி பெயர் சுசிலா.

AIADMK fields C.Gopalakrishnanfor Nilgiris LS seat

ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் பிஏ பட்டமும், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்ஏ சமூகவியல் பட்டமும் பெற்றுள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணா மலை பல்கலைக்கழகத்தில் எம்பில் பட்டம் பெற்றுள்ளார்.

சட்டம் பயின்றவர்

கர்நாடக மாநிலம் மாண்டியா சட்டக்கல்லூரியில் எல்எல்பி மற்றும் பிஇஎஸ் பட்டம் பெற்றுள்ளார்.

டாக்டர் பட்டம்

இவரது சமூக சேவைவை பாராட்டி உலக தமிழ் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி உள்ளது.

நகரமன்றத் தலைவர்

கடந்த 1980ம் ஆண்டு முதல் அதிமுக உறுப்பினராக இருக்கும் இவர் குன்னூர் நகரமன்றத் தலைவராக இருக்கிறார். இப்போது நீலகிரி தனி லோக்சபா தொகுதியின் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

2 கோபாலகிருஷ்ணன்கள்

ஏற்கனவே மதுரை லோக்சபா தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஆர். கோபாலகிருஷ்ணன் துணை மேயராக இருந்து எம்.பி. வேட்பாளராக உயர்ந்துள்ளார். அதேபோல நகரமன்றத் தலைவர் சி.கோபாலகிருஷ்ணனுக்கு எம்.பி. வேட்பாளராக அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

English summary
Chief Minister and AIADMK general secretary Jayalalithaa on Monday released the list of party candidates for the Lok Sabha polls, C. Gopalakrishnan, chairperson of the Coonoor municipality, will contest from The Nilgiris LS constituency
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X