எம்ஜிஆர் உருவாக்கிய பொதுச் செயலாளர் பதவியை அடியோடு ஒழித்து அதிமுக அதிடி தீர்மானம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  அதிமுக-விலிருந்து சிகலா, தினகரன் நீக்கம்?-வீடியோ

  சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் பொதுச்செயலாளர் பொறுப்பே கிடையாது என அக்கட்சி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

  சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு இன்று காலை கூடுகிறது. அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் இந்த பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

  2140 பேருக்கு அழைப்பு

  2140 பேருக்கு அழைப்பு

  இந்த கூட்டத்துக்கு மொத்தம் 2140 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்று நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் 296 பேர் பங்கேற்க உள்ளனர்.

  பொதுச்செயலர் பதவி ரத்து

  பொதுச்செயலர் பதவி ரத்து

  இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் அதிமுகவில் இனி பொதுச்செயலர் பொறுப்பே இல்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  தினகரன் அறிவிப்புகள் செல்லாது

  தினகரன் அறிவிப்புகள் செல்லாது

  இதே போல துணை பொதுச்செயலராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டதே செல்லாது; அவரால் வெளியிடப்பட்ட அறிவிப்புகள், நியமனங்கள் எதுவும் செல்லாது எனவும் அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

  ஒருங்கிணைப்பாளர்

  ஒருங்கிணைப்பாளர்

  மேலும் அதிமுகவை வழிநடத்த வழிகாட்டும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக அதிமுக விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. அத்துடன் தலைமை ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுச்செயலாளருக்கான அதிகாரம் இந்த இருவருக்கும் இருக்கும் எனவும் அதிமுக விதியில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Sasikala will be removed as interim general secretary of the AIADMK at Party general council meeting on today.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற