4 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சியே நீடிக்குமாம்.. சொல்கிறார் பாஜக எம்.பி., இல.கணேசன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

வேலூர்: தமிழகத்தில் அதிமுக ஆட்சி 4 ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்கும். அதற்கு பாஜக ஒருபோதும் தடையாக இருக்காது என அக்கட்சியின் எம்.பி.யும் மூத்த தலைவருமான இல. கணேசன் கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் பாஜக நிர்வாகிகளை சந்தித்து வருகிறார் இல.கணேசன். அதன் ஒரு பகுதியாக நேற்று வேலூர் மாவட்டத்திற்கு வருகை தந்தார். அப்போது கட்சி நிர்வாகிகளிடையே பேசிய அவர், தமிழகத்தில் அதிமுக ஆட்சி 4 ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்கும். அதற்கு பாஜக தடையாக இருக்காது. தமிழகத்தில் 'நீட்' தேர்வு நடப்பதற்கும், அதனை தடை செய்வதற்கும் தமிழக அரசு தான் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும்.

AIADMK government will rule on 4 years in Tamil Nadu, says La Ganesan

தமிழகத்தில் உள்ள மாணவர்கள் அறிவாளியாக உள்ளனர். இதற்கு உதாரணம் பல்வேறு மாநிலங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிகாரி பணியில் உள்ளனர். மத்திய அரசு அறிவித்தபடி 2022-ம் ஆண்டில் அனைவருக்கும் வீடு திட்டம் நிறைவேற்றப்படும். தற்போது தமிழகத்தில் குற்றம் குறைந்து, விபத்து அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் டாஸ்மாக் கடைகள் தான் என்றார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
BJp mp L Ganeshan said, AIADMK government will rule on 4 years in Tamil Nadu.
Please Wait while comments are loading...