இரட்டை இலை, தாமரை கூட்டணி விரைவில் உதயம்: சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் ’பரபர’

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவை: அதிமுக, பாஜக கூட்டணி விரைவில் உருவாகும் என அக்கக்ட்சியின் சூலூர் தொகுதி எம்.எல்.ஏ கனகராஜ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவை பாஜகதான் இயக்குவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. ஆனால் தமிழக பாஜக தலைவர்கள் அதிமுக அரசை விமர்சித்து கொண்டே இருக்கின்றனர்.

AIADMK likely to join hands with BJP, says Kanagaraj MLA

இருப்பினும் ஜெயலலிதா எதிர்த்த மத்திய அரசின் அத்தனை திட்டங்களுக்கும் தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்திருக்கிறது. தமிழக முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் நினைத்த நேரத்தில் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்கின்றனர்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போன்றவர்கள், எல்லாம் மோடி பார்த்துக் கொள்வார் என பகிரங்கமாகவே பொதுமேடைகக்ளில் பேசிவருகின்றனர். இதனை உறுதிப்படுத்தும் வகையில் அதிமுக எம்.எல்.ஏ. கனகராஜ் இன்று பேட்டியளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டியில், இரட்டை இலை- தாமரை கூட்டணி விரைவில் உதயமாகும்; இரட்டை இலையும் தாமரையும் இணைந்து செயல்பட வேண்டும் என்பது தமிழக மக்களின் விருப்பம் என கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
AIADMK MLA Kanakaraj said that his party will join hands with BJP very soon.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற