For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

38 ஆண்டுக்குப் பின் அ.தி.மு.க. வசமான புதுவை ராஜ்யசபா சீட்! கோகுலகிருஷ்ணன் போட்டியின்றி தேர்வு!!

By Madhivanan
Google Oneindia Tamil News

புதுச்சேரி: 38 ஆண்டுகாலத்துக்குப் பின்னர் புதுச்சேரியில் ராஜ்யசபா எம்.பி. சீட்டை அ.தி.மு.க. கைப்பற்றியுள்ளது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கோகுலகிருஷ்ணன் போட்டியின்றி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.யான கண்ணனின் பதவி காலம் அடுத்த மாதம் அக்டோபர் 6-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து புதிய எம்.பி.யை தேர்ந்தெடுப்பதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10-ந் தேதி தொடங்கியது.

rspudhuvai

கடந்த 18-ந் தேதி வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. இதில் அ.தி.மு.க. சார்பில் கோகுல கிருஷ்ணனும், மேலும் 4 பேர் சுயேட்சையாகவும் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆளும் என்.ஆர். காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது.

இதில் அ.தி.மு.க. வேட்பாளர் கோகுல கிருஷ்ணனின் வேட்புமனு மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மற்ற 4 சுயேச்சை வேட்பாளரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதையடுத்து வேட்புமனுக்களை வாபஸ் பெறும் கடைசி நாளான 21-ந் தேதி இன்று முறைப்படி கோகுலகிருஷ்ணன் ராஜ்யசபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி மோகன் தாஸ் அறிவித்தார். இதன் மூலம் 38 ஆண்டுகளுக்கு பின் புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியுள்ளது.

English summary
AIADMK's Gokulakrishnan elected RS from Puducherry after 38 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X