அதிமுக பொதுச்செயலராக சசிகலா நியமனம் ரத்து- பொதுக்குழுவில் அதிரடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
அதிமுக-விலிருந்து சிகலா, தினகரன் நீக்கம்?-வீடியோ

சென்னை: அதிமுகவின் பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது; அதிமுகவில் இனி பொதுச்செயலாளர் பொறுப்பே கிடையாது என்பது உள்ளிட்ட அதிரடி தீர்மானங்கள் அக்கட்சியின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

-கட்சியில் ஒருவரை நீக்கவோ சேர்க்கவே ஈபிஎஸ், ஓபிஎஸ்-க்கு அதிகாரம்

-அதிமுகவில் இனி பொதுச்செயலர் பதவியே கிடையாது- பொதுக்குழுவில் தீர்மானம்

-அதிமுக பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது- பொதுக்குழுவில் தீர்மானம்

-அதிமுக பொதுச்செயலர் சசிகலா நியமனம் ரத்து

-ஜெ. இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என தீர்மானம்

-யார் யார் என்னென்ன பொறுப்புகளில் இருந்தார்களோ அந்த பதவிகளில் தொடரவும் தீர்மானம்

-ஜெ.வுக்கு நினைவிடம் கட்டும் தமிழக அரசுக்கு நன்றி என தீர்மானம்

-தினகரன் வெளியிட்ட அறிவிப்புகள், நியமனங்கள் செல்லாது என பொதுக்குழுவில் தீர்மானம்

-இரட்டை இலையை மீட்க வேண்டும் என முதலாவது தீர்மானம் நிறைவேற்றம்

-தீர்மானங்களை வாசிக்கிறார் அமைச்சர் உதயகுமார்

-ஜெ. ஆட்சியை கவிழ்க்க நினைப்போருக்கு தக்கபாடம் புகட்டுவோம்- வளர்மதி

-மறைந்த அதிமுக பிரமுகர்களுக்கு பொள்ளாச்சி ஜெயராமன் இரங்கல் தீர்மானம் வாசித்தார்

-உள்ளிருப்பு போராட்டம் நடத்தி ஜெ. வழியில் ஆட்சியை நடத்தி வருகிறார் எடப்பாடி- வளர்மதி

-பொதுக்குழுவில் வளர்மதி ஆவேச பேச்சு

-ஆட்சியை கலைப்போம் என்பவர்கள் ஜெ.வை என்ன பாடுபடுத்தியிருப்பார்கள்?

-ஜெ. ஆட்சியை விரட்டுவோம் என மிரட்டுவோர் ஜெ.வுக்கு துரோகம் செய்தவர்கள்- வளர்மதி

-பொதுக்குழுவை நடத்தி தர மதுசூதனன் பெயரை முதல்வர் எடப்பாடி முன்மொழிந்தார்

-மதுசூதனன் பெயரை திண்டுக்கல் சீனிவாசன் வழிமொழிந்தார்

-முன்னாள் எம்.பி. ரபி பெர்னாட் அதிமுக பொதுக்குழு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்

-அதிமுக (அம்மா)- அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) என பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன

-காப்போம் காப்போம் கட்சியை காப்போம் என பொதுக்குழுவில் முழக்கம்

-பொதுக்குழுவில் ஜெ. மறைவுக்கு மவுன அஞ்சலி

-அண்ணா, எம்ஜிஆர் ஜெ. படங்களுக்கு முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் மலரஞ்சலி

-ஆந்திரா, கேரளா, கர்நாடகா நிர்வாகிகளும் பொதுக்குழுவில் பங்கேற்பு

-அழைப்பிதழை காட்டினால்தான் பொதுக்குழுவுக்குள் செல்ல அனுமதி

-பொதுக்குழு மேடையில் 3 வரிசகளில் 57 இருக்கைகள் போடப்பட்டுள்ளன

-அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் தொடங்கியது-

-அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கும் பெங்களூரு கோர்ட் தீர்ப்பு எங்களை கட்டுப்படுத்தாது செம்மலை

-அதிமுக பதிவு செய்யப்பட்ட மாநில கட்சி என்பதால் எங்களை கட்டுப்படுத்தாது- செம்மலை

-பொதுக்குழு மண்டபத்தில் முதல்வர் எடப்பாடியார் ஆலோசனை

-தீர்மானங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்துவதாக தகவல்

-மாவட்டங்களில் இருந்து தொடர்ந்து நிர்வாகிகள் வருகை

-தினகரன் ஆதரவாளர்களுக்கு தனி இருக்கை ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல்

-அதிமுக பொதுக்குழுவில் தினகரன் ஆதரவாளர் தளவாய் சுந்தரம் பங்கேற்பு

-தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம்

-தளவாய் சுந்தரம் அண்மையில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளராக மாறினார்

-அதிமுக பொதுக்குழுவுக்கு 95% பேர் வருகை என தகவல்

-அதிமுக பொதுக்குழு இன்னும் சற்றுநேரத்தில் கூடுகிறது

-அதிமுக பொதுக்குழுவில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்பு

- சசிகலா, தினகரன் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கும் தீர்மானம் நிறைவேறுகிறது

-அதிமுக ஒருங்கிணைப்பு குழு தலைவராக ஓபிஎஸ்ஸை நியமிக்கும் தீர்மானம் கொண்டுவரப்படுகிறது

-தேர்தல்களில் வேட்பாளரை அறிவிக்க, சின்னம் ஒதுக்க ஈபிஎஸ், ஓபிஎஸ்-க்கு அதிகாரம் வழங்கப்படலாம்

-தேர்தல் ஆணையத்தில் இருதரப்பும் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை திரும்பப் பெறவும் தீர்மானம் நிறைவேறுகிறது

-பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஈபிஎஸ் வருகை

-பொதுக்குழு கூட்டத்துக்கு புறப்பட்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

-பொதுக்குழு மண்டபத்துக்கு அமைச்சர்கள் வருகை

-அமைச்சர்கள் செங்கோட்டையன், ஓஎஸ் மணியன், செல்லூர் ராஜூ வருகை

AIADMK to sack Sasikala, Dinkaran today

-அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் பொதுக்குழு கூடுகிறது

-அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க நிர்வாகிகள் வருகை

-அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க புறப்பட்டார் ஓபிஎஸ்

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sasikala will be removed as interim general secretary of the AIADMK at general council meeting on today.
Please Wait while comments are loading...