127 அடி உயர அதிமுக கொடிக்கம்பம் விழுந்தது.. உளுந்தூர்பேட்டையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சேலம் புறவழிச்சாலையில் அதிமுகவின் 127 அடி உயர கொடிக்கம்பம் நிறுவப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பெய்த மழையின் காரணமாக நள்ளிரவில் திடீரென அந்த கொடிக்கம்பம் சரிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக அந்த பகுதியில் யாரும் அப்பகுதியில் இல்லை என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தமிழகத்தில் நேற்று பகல் நேரங்களில் கடுமையாக வெயில் கொளுத்தி எடுத்தது. மதிய நேரங்களிலும் வெயில் சுட்டெரித்தது. ஆனால் மாலை நேரத்திற்கு பிறகு பல இடங்களில் மழை பெய்ய தொடங்கியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

எனினும் இரவில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய தொடங்கியது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது. இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. அந்த வகையில் கள்ளக்குற்ச்சி மாவட்டத்தின் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மழை பெய்தது. இரவில் பெய்ய தொடங்கிய மழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது.
இதனால் கள்ளக்குறிச்சியில் உளுந்தூர்பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த காற்றும் வீசியதால் பல்வேறு இடங்களில் மரக்கிளைகளும் முறிந்து விழுந்தன. இதற்கிடையே அதிமுக சார்பில் கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை - சேலம் புறவழிச்சாலை பகுதியில் உள்ள ரவுண்டானாவில் அமைக்கப்பட்டு இருந்த 127 அடி உயர பிரமாண்ட கொடிக்கம்பம் கீழே விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் இந்த கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு முழுக்க காற்றுடன் பெய்த கனமழை காரணமாக இந்த கொடிக்கம்பம் திடீரென சாய்ந்து விழுந்தது. நள்ளிரவு நேரம் என்பதால் அப்பகுதியில் யாரும் இல்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அப்பகுதிக்கு பொதுமக்கள் யாரும் வராத வகையில் பார்த்துக்கொண்டனர். தொடர்ந்து கிரேன் மூலமாக அந்த கொடிக்கம்பத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். விஜய்யின் தவெக மதுரை மாநாட்டின் போது 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கும் போது அந்த கொடிக்கம்பம் கீழே நின்ற தொண்டர் ஒருவரின் காரில் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
-
ரீல்ஸ் போடுங்கப்பா..ஆட்சியை பிடிக்கலாம்! அதிமுக கூட்டத்தில் அள்ளி விட்ட எடப்பாடி! ஆடிப்போன ஐடி விங்! -
இன்னமும் ஒத்துக்க மாட்றாங்க பாருங்களேன்! அதிமுகவை விழுங்கும் தவெக! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி! -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
“தவெகவிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? தைரியம் இருந்தா ரெய்டு விடுங்க” - மரகதம் குமரவேல் சவால்! -
"முதல்வர் அண்ணன் எடப்பாடியார்.." பழக்க தோஷத்தில் “டங்க் ஸ்லிப்” ஆகி பின் சுதாரித்த மரகதம் குமரவேல்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
மிதுன் பழனிசாமியை அரசியலுக்கு அழைத்து வர எடப்பாடி பழனிசாமி டிராமா ஆடுகிறார்.. சிவி சண்முகம்! -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்!










Click it and Unblock the Notifications