For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுகவுக்கு தேவை அழகிரி.. ஓ.பி.எஸ்சை வம்புக்கு இழுத்த திமுகவினருக்கு, டிவிட்டரில் அதிமுக பதிலடி

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: டிவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் அதிமுக, திமுக, பாமக, நாம் தமிழர் என பல கட்சியினரும், ஆதரவை திரட்டி வருகிறார்கள்.

இந்நிலையில், அதிமுக சார்பில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சர்கள் தேர்தல் பணிகள் குறித்து நேற்றுமுன்தினம் ஆலோசனை நடத்தினார்.

ஏற்கனவே அவரது ஆதரவாளர்கள் சிலர் மாவட்ட செயலாளர்கள் பதவியையும், அமைச்சர் பதவியையும் இழந்த நிலையில், இக்கூட்டம் நடைபெற்றதால், ஜெயலலிதாவுக்கு எதிராக ஓ.பி.எஸ் கூட்டம் நடத்துவதாக டிவிட்டரில் சிலர் தகவல் பரப்பினர்.

ஓபிஎஸ்சுக்கு எதிராக

ஓபிஎஸ்சுக்கு எதிராக

இதையடுத்து அதிமுகவுக்குள் கலகம் ஏற்படுத்தும் நோக்கத்தோடு, #OPS4CM என்ற ஹேஷ்டேக் உருவாக்கி, பன்னீர்செல்வம் முதல்வராக ஆதரவு இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினர்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இதை பார்த்து பன்னீர்செல்வம் மீது ஜெயலலிதா ஆக்ஷன் எடுப்பார் என சிலர் எதிர்பார்த்தனர். ஆனால், விஷம பிரச்சாரம் என்பதை அறிந்த அதிமுக தலைமை அதை கண்டுகொள்ளவில்லை.

அழகிரி பெயரில்

இந்தநிலையில், திமுகவுக்குள் கலகத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில், #Alagiri4DMK என்ற ஹேஷ்டேக்கை எதிரணியினர் உருவாக்கி, நேற்று அதை டிவிட்டரில் டிரெண்ட் செய்தனர். ஓபிஎஸ் ஹேஷ்டேக்கை போலவே, அழகிரி பெயரிலான ஹேஷ்டேக்கும், தேசிய அளவில் டிரெண்ட் ஆனது.

தேசிய டிரெண்ட்

இதனால் தேசத்தின் பல தரப்பட்ட மக்களும், அது என்ன என்பது பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் காட்டினர். அழகிரிக்கு ஆதரவு இருப்பதை போல காண்பித்து, திமுகவிற்குள் பற்ற வைப்பது நேற்றைய டிரெண்ட் செட்டர்கள் பிளான்.

ஜஸ்ட் ஃபார் ஃபன்

ஆனால், இரண்டு ஹேஷ்டேக்குகளையுமே சம்மந்தப்பட்ட கட்சி தலைமைகள், ஜோக்காக கடந்து சென்றுவிட்டன என்பதே நிதர்சனம்.

சம பலம்

சம பலம்

அதேநேரம், திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்குமே, சமூக வலைத்தளங்களில் சம பலத்தோடு ஆதரவாளர்கள் உள்ளனர் என்பதை அறிந்துகொள்ள இந்த ஹேஷ்டேக்குகள் பயன்பட்டன என்பது மட்டும் உண்மை.

English summary
#Alagiri4DMK hastag created by Tamil netizens who wants Alagiri become part of DMK, and make it to trend in the Twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X