மாவட்ட நீதிபதிகளை நியமிக்க இந்தியா அளவில் தேர்வா.. மு.க. ஸ்டாலின் கண்டனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மாவட்ட நீதிபதிகளை நியமிக்க இந்திய அளவில் தேர்வு நடத்தப்படும் என்பது மாநில சுயாட்சிக்கு எதிரான செயல் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று சட்டசபையில் நேரமில்லாத நேரத்தில் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அப்போது, மத்திய அரசின் இந்த அறிவிப்பு மாநில சுயாட்சி உரிமையை பறிக்கும் செயல் என்று ஸ்டாலின் கூறினார்.

All India common test for selection of judges for lower courts, Stalin condemns

மேலும், மத்திய அரசின் இந்தச் செயலை மாநில அரசு கண்டிக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார். மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு 7 மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

மத்திய அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து தீர்மானம் ஒன்றை சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும் என்றும் ஸ்டாலின் கோரியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The opposition leader MK Stalin condemned all India common test for selection of judges for lower courts.
Please Wait while comments are loading...