எல்லா எம்.எல்.ஏக்களும் தினகரனோடுதான் இருக்காங்களாம்.. அவரே சொல்கிறார் !

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அனைத்து சட்டசபை உறுப்பினர்களும் எங்களுடன் உள்ளனர் என்று அதிமுக அம்மா கட்சி துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சசிகலா குடும்பத்தை தள்ளி வைத்துவிட்டு கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்துவோம் என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அறிவித்துள்ளது. அமைச்சர்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

All the AIADMK MLAS are with me, says TTV Dinakaran

இந்நிலையில் டிடிவி தினகரன் இன்று காலை சுமார் 10 மணிக்கு தனது வீட்டிலிருந்து வெளியே வந்தார். அவர், ஃபெரா வழக்கு தொடர்பாக எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக கிளம்பியதாக கூறப்படுகிறது. அப்போது, நிருபர்கள் அவரை சூழ்ந்து கேள்விகளை எழுப்பினர்.

அப்போது அவர் கூறுகையில், கட்சியில் எனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. அனைத்து சட்டசபை உறுப்பினர்களும் எங்களோடுதான் உள்ளனர். விரைவில் ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். அதிமுக பிரச்சினைக்கு பாஜகதான் காரணமா என்ற நிருபர்களின் கேள்விக்கு, இதை நீங்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும் என கூறி கிளம்பி சென்றார் டிடிவி தினகரன்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
All the AIADMK MLAS are with me, says TTV Dinakaran in a brief press meet at his residence in Chennai.
Please Wait while comments are loading...