நடுரோட்டில் நிர்வாணமாக போதையுடன் சுற்றித் திரிந்த அமெரிக்க பெண் மீட்பு

போதையில் சுற்றித்திரிந்த அமெரிக்க பெண் மீட்கப்பட்டார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    போதையான அமெரிக்க மனைவியை நடுரோட்டில் கைவிட்டு தலைமறைவான சென்னை இளைஞர்- வீடியோ

    காஞ்சிபுரம்: நிர்வாண கோலத்தில் அமெரிக்க பெண் ஒருவரை போலீசார் மீட்டுள்ளனர்.

    அமெரிக்காவைச் சேர்ந்தவர் கேலா. 26 வயதான இவர், சென்னை வேளச்சேரி பகுதியில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த விமல் என்பவரை 2 வருஷத்துக்கு முன்பு கல்யாணம் செய்து கொண்டார். வேளச்சேரியிலேயே ஒரு அப்பார்ட்மெண்டில் இருவரும் ஒரு வீடு எடுத்து தங்கியும் வந்திருக்கிறார்கள்.

     அமெரிக்க மனைவி

    அமெரிக்க மனைவி

    ஆனால் கொஞ்ச நாளில் விமலுக்கு வேலை போய்விட்டது. இதனால் விரக்தியிலேயே விமல் இருந்துள்ளார். இதில், அமெரிக்க மனைவிக்கு போதைப்பழக்கமும் இருந்துள்ளது. பழக்கம் என்று சொல்ல முடியாது. போதைக்கு அடிமையே அவர்.

     நிர்வாண கோலம்

    நிர்வாண கோலம்

    இந்நிலையில், நேற்று காஞ்சிபுரம் அடுத்த வெள்ளைகேட் சென்னை-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் நடுவழியில் காரிலிருந்து இறக்கிவிட்டு சென்றுவிட்டார். அமெரிக்க மனைவியோ ஃபுல் போதையில் இருந்துள்ளார். அந்த ஹைவே ரோட்டிலேயே தள்ளாடிபடியே நிர்வாண கோலத்தில் சுற்றி திரிந்துள்ளார்.

     ஆட்டோ டிரைவர்கள்

    ஆட்டோ டிரைவர்கள்

    வெளிநாட்டு பெண் இப்படி ரோட்டில் போதையுடன் சுற்றி திரிவதை கண்ட மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டனர். இதுகுறித்து விசாரிக்கலாம் என்றால் அந்த பெண்ணுக்கு போதை தெளியவே இல்லை. எனினும், அந்த பகுதியில் இருக்கும் ஆட்டோ டிரைவர்களால் அவர் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

     சுயநினைவு இல்லை

    சுயநினைவு இல்லை

    உடனடியாக ஒரு சேலையை வாங்கி அமெரிக்க பெண்ணுக்கு உடுத்திவிட்டனர். பின்னர் வேளச்சேரி பனையூரில் உள்ள லிட்டில் ஆர்ட்ஸ் எனும் பெண்கள் காப்பகத்தில் கொண்டுபோய் பத்திரமாக ஒப்படைத்தனர். ரோட்டில் திரிந்தது முதல் காப்பகம் வரும் வரை அமெரிக்க பெண்ணுக்கு சுயநினைவே இல்லை. போதை தெளிந்தபிறகு அந்தபெண் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

     முற்றிய சண்டை

    முற்றிய சண்டை

    விமல் வேலை இல்லாமல் இருக்கவும், இந்த பெண் எப்பவுமே போதையில் இருந்துள்ளார். இதனை பலமுறை விமல் சொல்லியும் அமெரிக்க மனைவி கேட்கவே இல்லையாம். அதனால் ரெண்டு பேருக்கும் நிறைய சண்டை வந்திருக்கிறது. அதனால்தான் சண்டை முற்றி, ஆத்திரத்தில் நடுவழியில் இறக்கிவிட்டு போய்விட்டார் என தெரியவந்தது.

     விமல் மாயம்

    விமல் மாயம்

    விமலை தேடி சென்றால் அவர் வீட்டையே காலி செய்து விட்டிருக்கிறார். இதையடுத்து, அமெரிக்க பெண் குறித்து, அமெரிக்க தூதரகத்திற்கு தகவல் தெரிவித்து, போலீசார் உதவியுடன் விமானம் மூலம் அமெரிக்கா அனுப்பிவைத்தனர். ஒருபக்கம் மாயமான விமலையும், அமெரிக்க பெண்ணை பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+