For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தடைகளை உடைத்தெறிந்து மீண்டும் முதல்வராக வருவார் அம்மா: சொல்வது நடிகை விஜயசாந்தி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: திமுகவினர் போட்ட அனைத்து பொய் கேஸ்களையும் உடைத்தெறிந்து வெற்றி வாகை சூடுவார் அம்மா ஜெயலலிதா, என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நடிகை விஜயசாந்தி கூறியுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையுலகினரும் அரசியல் கட்சித்தலைவர்களும் கருத்து கூறி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நடிகை விஜயசாந்தி ஜெயலலிதாவிற்கு ஆதரவாக கருத்துக்கூறியுள்ளார்.

Amma will be back soon with bang, says 'Telangana' Vijayashanthi

ரவுடி கட்சி திமுக

திமுகவில் ரவுடிகளும், 2 ஜி ஊழல்வாதிகளும்தான் இருக்கின்றனர். சென்னையில் இருந்த போது ஜெயலலிதாவிற்கு ஆதரவாக பேசியதற்காக எனது வீட்டில் குண்டு வீசினார்கள்.

பெண்களுக்கு எதிரான கட்சி

பெண்கள் அரசியலில் வாழ விடக்கூடாது என்று நினைப்பவர்கள்தான் திமுகவில் இருக்கின்றனர். எனவேதான் ஜெயலலிதாவின் வளர்ச்சி பொறுக்காமல் பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளனர்.

அம்மாவுக்கு பாராட்டு

தமிழக முதல்வராக இருந்து அவர் செய்த சாதனைகளை இந்தியா முழுவதும் உள்ள மாநில அரசுகள் பின்பற்றுகின்றனர். ஆந்திரா, தெலுங்கானாவில் உள்ள முதல்வர்களுக்கு ஜெயல்லிதாதான் உதாராணமாக இருக்கிறார்.

திமுக கெட்ட எண்ணம் கொண்ட கட்சி

அதிமுக நல்ல ஆட்சி கொடுத்தது. அதை மக்கள் விட்டுக்கொடுக்க மாட்டார்கள் திமுக கெட்ட எண்ணம் கொண்ட கட்சி.

அம்மா ஒரு போராளி

நான் எங்கே இருந்தாலும் குரல் கொடுப்பேன்.எனக்கு பாசம் உள்ளது. அவர்கள் ஒரு போராளி. கண்டிப்பாக வெளியே வருவார்.

உங்களுக்காகத்தான் அம்மா

அம்மா சிறையில் இருப்பதை எண்ணி யாரும் தற்கொலை செய்யவேண்டாம். அம்மா உங்களுக்காகத்தான் இருக்கிறார். நாம் அனைவரும் போராடுவோம். அம்மா நிச்சயம் வெளியே வருவார் என்றார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நடிகை விஜயசாந்தி.

English summary
Vijayashanth, the actress from Telangana has said that She is sure that ADMK leader Jayalalitha will be back soon with more power to rule the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X