For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சேலம் 8 வழிச்சாலை தொடர்பான ஹைகோர்ட் உத்தரவு அன்புமணி, மன்சூர் அலிகான் வரவேற்பு

சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு கையகப்படுத்த உள்ள நிலங்களின் உரிமையாளர்களை மறு உத்தரவு வரும் வரை அப்புறப்படுத்த கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதற்கு பாமக எம்பி அன்புமணி ராமதாஸ், நடி

Google Oneindia Tamil News

சென்னை: சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு கையகப்படுத்த உள்ள நிலங்களின் உரிமையாளர்களை மறு உத்தரவு வரும் வரை அப்புறப்படுத்த கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதற்கு பாமக எம்பி அன்புமணி ராமதாஸ், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சேலம் - சென்னை இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 8 வழிச்சாலை அமைக்கும் பணிக்காக சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

Anbumani Ramadoss and actor Mansoor alikhan welcomes high court order

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த திட்டத்திற்கு எதிராக பூவுலகில் நண்பர்கள் அமைப்பின் சுந்தர் ராஜன், பாமக நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்புராமன் அமர்வு சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு கையகப்படுத்த உள்ள நிலங்களின் உரிமையாளர்களை மறு உத்தரவு வரும் வரை அப்புறப்படுத்த கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கு பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, சேலம் - சென்னை 8 வழிச்சாலை வளர்ச்சித் திட்டம் கிடையாது. ஏற்கனவே 3 நெடுஞ்சாலைகள் சேலம்-சென்னை இடையே உள்ளது.

அரசின் வீம்பினால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கும் நீதிமன்றத்துக்கும் அரசு பொய் தகவலை தருகிறது இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதேபோல் உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு நடிகர் மன்சூர்அ அலிகான் மற்றும் விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

English summary
Anbumani Ramadoss and actor Mansoor alikhan welcomes high court order on Salem - chennai express way.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X