For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்னும் தீரத்தோடு போராடியிருக்க வேண்டாமா அனிதா?

பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும், நீட் தேர்வில் மதிப்பெண் கிடைக்காததால் மருத்துவ கனவு தகர்ந்த விரக்தியில் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    இறந்து போன நீட் போராளி அனிதா-வீடியோ

    அரியலூர் : நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடந்ததால் அதிக மதிப்பெண் பெற்றும், மருத்துவ இடம் கிடைக்காத விரக்தியில் கூலித் தொழிலாளி சண்முகத்தின் மகள் அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழக மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    அரியலூர் குழுமூரை சேர்ந்தவர் சண்முகம். மூட்டைத் தூக்கும் தொழிலாளியான இவரது மகள் அனிதா, பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண்களும், மருத்துவ கட்ஆஃப்பில் 196.75 மாணவர்களுக்கு பெற்றுள்ளார். ஆனால் நீட் தேர்வில் அனிதா 86 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார்.

    சென்னை ஹைகோர்ட்டில் நீட் தேர்வுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கூடாது என்று சிபிஎஸ்இ மாணவர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் எதிர் மனுதாரராக இணைந்து நீட் தேர்வுக்கு விலக்கு கோரி போராடினார் அனிதா.

    சமூக நீதிப் போராட்டம்

    சமூக நீதிப் போராட்டம்

    இந்த வழக்கு விசாரணைக்காக டெல்லியில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்காக வெள்ளந்தியான அனிதா சமூக நீதிக்கான போராட சென்றார். ஆனால் ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அரசு கை விரித்தது.

    பெரும் அதிர்ச்சி

    பெரும் அதிர்ச்சி

    இதனால் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது. இதனால் பெரும் அதிர்ச்சியான மாணவி அனிதா கடந்த சில நாட்களாகவே மனஅழுத்தத்தில் இருந்ததாக தெரிகிறது.

    தனிமையில் இருந்து வந்தார்

    தனிமையில் இருந்து வந்தார்

    பெற்றோர், உறவினர்களுடன் சரியான முறையில் கலந்து பேசாமல் தனிமையிலேயே இருந்துள்ளார் அனிதா. இந்நிலையில் இன்று அனிதா தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். வார்த்தைகளால் விவரிக்க முடியாத இந்த மாணவியின் மரணம் நம் மனதை அழுத்துகிறது.

    இன்னும் தீரத்தோடு போராடியிருக்க வேண்டாமா

    இன்னும் தீரத்தோடு போராடியிருக்க வேண்டாமா

    வசதி வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் கல்வி மட்டுமே போதும் தனது சமூகத்தை உயர்நிலைக்கு கொண்டு வரலாம் என்று படிப்பை மட்டுமே உறுதணையாக எடுத்து படித்தார் அனிதா. சட்டப்போராட்டத்திலும் தோற்ற மாணவி அனிதா இனி என்ன இருக்கிறது இந்த சமூகத்தை நம்பியிருக்க என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டு சென்றுவிட்டார் தனது மரணத்தின் மூலம். ஆனால் இன்னும் தீரத்துடன் அனிதா போராடியிருக்க வேண்டும் என்பதே அனைவரின் ஆதங்கமாக உள்ளது.

    English summary
    Ariyalur student Anitha who fights for her medical seat finally ends her life for not getting MBBS seats on the basis of +2 students.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X