For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அனிதா தற்கொலை திட்டமிட்ட கொலை.. அரசுகள் மீது வழக்கறிஞர் சுரேஷ் பாபு ஆவேசம்

நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவி அனிதாவின் தற்கொலை அரசுகளின் திட்டமிட்ட கொலை என்று பகிரங்க குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார் வழக்கறிஞர் சுரேஷ் பாபு.

By Devarajan
Google Oneindia Tamil News

சென்னை: நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலை சம்பவம் அரசுகளின் திட்டமிட்ட கொலை என்று பகிரங்க குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார் வழக்கறிஞர் சுரேஷ் பாபு.

அரியலூர் மாணவி அனிதா இன்று தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து மருத்துவராக வரவேண்டும் என்ற கனவோடு இருந்த மணவை அனிதா நீட் தேர்வால் தனது உயிரையே இழந்துள்ளார்.

 Anitha suicide is a planned murder, says Advocate Suresh babu

இந்த நிலையில், அனிதாவின் தற்கொலை தமிழகம் முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.

Recommended Video

    இறந்து போன நீட் போராளி அனிதா-வீடியோ

    இதனிடையே மாணவி அனிதாவின் வழக்கறிஞர் சுரேஷ் பாபு கூறுகையில், " நான் கடைசியாக அனிதாவை வழக்கின்போதுதான் பார்த்தேன். அப்போது அவர் பேசுகையில், ' எங்க பகுதி மக்களுக்கு நான் மருத்துவராகி சேவை செய்யணும். எப்படியாவது நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைத்துவிட வேண்டும்' என்றார்.

     Anitha suicide is a planned murder, says Advocate Suresh babu

    ரொம்ப அதிர்ச்சியாக இருக்கிறது. அனிதாவின் தற்கொலை அரசுகள் செய்த திட்டமிட்ட கொலை. அரசுகள்தான் பொறுப்பு. முதலில் ஒரு கருத்து, வழக்கு நடக்கையில் ஒரு அக்கருத்து என ஏன் மத்திய அரசுக்கு மனமாற்றம் வந்தது என்று தெரியவில்லை.

    இன்னமும் அனிதாவை போல பல அனிதாக்களுக்கு மத்திய மாநில அரசுகள் செய்த மோசமான முடிவு இது." என்று தெரிவித்தார் வேதனையோடு.

    English summary
    Advocate Suresh babu said Anitha suicide is a planned murder of neet to the press.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X