யப்பா.. ரேடாரை பாருங்கள்.. எப்போது வேண்டுமெனாலும் கன மழை பெய்யலாம்.. தமிழ்நாடு வெதர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஊட்டியாக மாறிய சென்னை..எப்படி தெரியுமா?- வீடியோ

  சென்னை: மழை மழை மேகங்கள் கடலோரத்தை ஒட்டி அணி வகுத்து நிற்பதாக தமிழ்நாடு வெதர் அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்கள் முதல் சென்னை வரை எப்போது வேண்டுமெனாலும் கன மழை பெய்ய தயாராக இருக்கிறது என்றும் அந்த தனியார் வானிலை அமைப்பு கூறியுள்ளது.

  சென்னையில் கடந்த வாரம் வடகிழக்குப் பருவமழை வெளுத்துவாங்கியது. இதனால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

  கடந்த 2 நாட்களாக மழை ஓய்ந்து வெயில் காய்ந்தது. இந்நிலையில் நேற்று மாலை சென்னை நகரில் குளிர் காற்றுடன் லேசான மழை பெய்தது.

  விட்டு விட்டு மழை

  விட்டு விட்டு மழை

  இன்றும் காலை முதல் சென்னையின் பெரும்பாலான இடங்களில் விட்டு விட்டு மழை பெய்துவருகிறது. நகர் முழுவதும் மேகமூட்டமாக உள்ளது.

  எப்போது வேண்டுமானாலும்..

  எப்போது வேண்டுமானாலும்..

  இந்நிலையில் சென்னை முதல் டெல்டா மாவட்டங்கள் வரை கடலேரத்தில் மழை மேகங்கள் திரண்டு அணிவகுத்து நிற்பதாக தமிழ்நாடு வெதர் என்ற தனியார் அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யலாம் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

  நம்பாதீர்கள்..

  நம்பாதீர்கள்..

  மழை மேகங்கள் அதிகளவு திரண்டிருப்பதால் கனமழை பெய்யும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. மேலும் ஞாயிற்றுக் கிழமைதான் மழை பெய்யும் என நம்பாதீர்கள் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

  மகிமையே இதுதான்,,

  மகிமையே இதுதான்,,

  எந்தநேரத்திலும் மழை பெய்யலாம் என்றும் தமிழ்நாடு வெதர் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுநிலையின் மகிமையே இதுதான் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

  2 காற்றழுத்த தாழ்வுநிலைகள்..

  2 காற்றழுத்த தாழ்வுநிலைகள்..

  மேலும் ஒன்றல்ல இரண்டு காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாகப் போகிறது என்றும் தமிழ்நாடு வெதர் அமைப்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை இயல்பை விட அதிகம் இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது 2 காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாகும் என தனியார் வானிலை அமைப்பு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Tamilnadu weather said bands lined near coasts. Anytime rains may start From Delta To Chennai Coast. Two Low's are expected Tamilnadu weather said.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற