ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து சென்னை பூண்டி ஏரிக்கு நீர் திறப்பு!
Recommended Video
கண்டலேறு: ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதிநீர் சென்னை பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 500 கனஅடி வீதம் திறக்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக 2,000 கன அடியாக உயர்த்தப்பட உள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முதன்மையான ஏரிகளில் பூண்டி நீர்தேக்கமும் ஒன்று. கோடைகாலத்தில் இந்த ஏரி முற்றிலும் வறண்டு போய் காணப்பட்டது.

கடந்த சில நாட்களாக திருவள்ளூர் உள்ளிட்ட பூண்டி ஏரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால் பூண்டி ஏரிக்கு மழைநீர் வரத்து அதிகரித்தது.
இந்த நிலையில் ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணநதி நீர் இன்று காலை திறக்கப்பட்டது. தற்போது வினாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இது படிப்படியாக 2,000 கன அடியாக உயர்த்தப்படும். இந்த நீரானது 5 நாட்களில் தமிழக எல்லையான ஜீரோ பாயிண்ட்டுக்கு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திராவுடனான கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி தமிழகத்துக்கு 8 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது. முன்னதாக ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை தமிழக அதிகாரிகள் குழு நேரில் சந்தித்து கிருஷ்ணநதிநீர் குறித்து விவாதித்தது. அப்போது தமிழகத்துக்குரிய கிருஷ்ணா நதிநீர் திறந்துவிடப்படும் என ஜெகன் மோகன் ரெட்டி உறுதியளித்திருந்தது குறிப்பிட்டத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications