அரசியலுக்கு வரும் ரஜினிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து.. ஆதரவு அளிக்க பரிசீலிப்பதாக பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியலுக்கு வரும் நடிகர் ரஜினிகாந்த்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர், சென்னை இந்த நாட்டின் கலாச்சார தலைநகரமாக விளங்குவதாக புகழாரம் சூட்டினார். 25 ஆண்டு காலம் என்னை ஆதரித்த தமிழக மக்களுக்கு நன்றி என்றும் அவர் தெரிவித்தார்.

AR Rahman congratulates Rajinikanth on his political career

திரைத்துறையில் இருப்பவர்களும் அரசியலுக்கு வரலாம் என தெரிவித்த ரஹ்மான், ரஜினிகாந்த்துக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், ரஜினி கட்சி ஆரம்பித்த பிறகு, அவருடன் இணைந்து பணியாற்றுவது குறித்து சூழ்நிலைக்கு ஏற்ப சிந்தித்து எனது நிலைப்பாட்டை தெரிவிக்கிறேன் என்றும் கூறினார்.

மேலும் ஆன்மீக அரசியல் சர்ச்சை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, ஆன்மீக அரசியல் என்றால் என்ன அர்த்தம் என்பது ரஜினிகாந்த்துக்கு தெரியும் என்றும் ரஹ்மான் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Music Composer AR Rahman congratulates Rajinikanth on his political career. Rahman said that people in the film industry may come to politics.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற