சொத்து குவிப்பு வழக்கில் தினகரன் ஜெயிலுக்கு போகாமல் தப்பியது எப்படி?- அறப்போர் இயக்கம் புதிய வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.கே.நகரில் சசிகலா அதிமுகவின் வேட்பாளராக போட்டியிடும் ஃபெரா குற்றவாளி தினகரனுக்கு எதிராக 'ஹவாலா' வேட்பாளர் டிடிவி தினகரன் என்ற தலைப்பில் அறப்போர் இயக்கம் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். ஃபெரா சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்பட்ட குற்றவாளியான தினகரன் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தலிலேயே போட்டியிட முடியாது எனவும் கூறப்படுகிறது.

Arappor Iyakkam releases 'Hawala Candidate Dinakaran' video

ஆனாலும் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வோம் என கூறிவருகிறார் தினகரன். இந்த நிலையில் 'ஹவாலா' வேட்பாளர் என்ற பெயரில் அறப்போர் இயக்கம் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில், சசிகலா சிறை தண்டனை அனுபவித்து வரும் சொத்து குவிப்பு வழக்கில் தினகரனும் ஒரு குற்றவாளிதான்... ஆனால் தினகரனுக்கு எதிரான 9 சாட்சிகள் வெளிநாட்டில் இருக்கின்றனர்.

அந்த 9 பேரையும் கொண்டுவர வேண்டுமெனில் சொத்து குவிப்பு வழக்கு மேலும் பலா ஆண்டுகாலம் நீடிக்கும். ஆகையால் வெளிநாட்டு சாட்சிகளை கொண்டுவர கோரும் வழக்கை கர்நாடகா அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா கைவிட்டார். அதனால் சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனையில் இருந்து தினகரன் தப்பினார் என விவரித்துள்ளது.

அத்துடன் காபிபோசா சட்டத்தின் கீழ் உச்சநீதிமன்றத்தால் தண்டனை உறுதி செய்யப்பட்ட குற்றவாளி தினகரன் எனவும் அந்த வீடியோ விவரிக்கிறது. ஹவாலா மோசடியில் ஈடுபட்ட தினகரனையா ஆர்கே நகர் வாக்காளர்கள் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்? என கேள்வியும் எழுப்பியுள்ளது அறப்போர் இயக்கத்தின் வீடியோ.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Arappor Iyakkam today released the new video in the name of "Hawala Candidate - T.T.V Dinakaran at RKnagar".
Please Wait while comments are loading...