வார்த்தையை விட்ட சீமான்.. வேல்முருகன் வேற விடமாட்டாரு போலயே.. குறுக்கே கதர்கள்.. "தர்மசங்கட" திமுக
சென்னை: இன்றைய தினம் பிரதமர் மோடி சென்னை வருகிறார்.. இந்த வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஒருபக்கம் காங்கிரசும், மறுபக்கம் தமிழக வாழ்வுரிமை கட்சியும் ரெடியாகி கொண்டிருக்கிறது.. இன்று என்ன நடக்க போகிறது?
ராகுல் காந்தி விவகாரத்தில் அளவுக்கு அதிகமாகவே கொந்தளித்து போயுள்ளன எதிர்க்கட்சிகள்.. குறிப்பாக காங்கிரஸ் கட்சி, அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்புகளை நாடு முழுவதும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்கள்.
அந்தவகையில், தமிழகத்திலும் பாஜக மீதான எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.. இன்றைய தினம் பிரதமர் வருகையின்போது தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்ய போகிறோம் என்று ஏற்கனவே தமிழக காங்கிரஸ் கூறியிருந்தது.

வேல்முருகன்: மேலும், பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராக கறுப்புக் கொடி காட்ட காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்... முன்னதாக, பறக்கவிடுவதற்காக வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கில் கருப்பு பலூன்களை போலீசார் பறிமுதல் செய்தாலும், காங்கிரஸ் கட்சி இன்றைய தினம் மோடியின் வருகையின்போது என்ன செய்ய போகிறது? என்பது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. காங்கிரஸ், கட்சி மட்டுமல்ல, விசிக, வேல்முருகன், கம்யூனிஸ்ட்கள், மதிமுக, இப்படி பலரும் திரண்டு, பிரதமர் வருகையின்போது எதிர்ப்புகளை தெரிவிக்கக்கூடும் என்றும் கணிப்புகள் வெளியாகிய வண்ணம் இருந்தன.
டபுள் கட்சிகள்: இதில் தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன், இது தொடர்பாக அறிக்கையே விடுத்திருக்கிறார்.. போதாக்குறைக்கு நிலக்கரி சுரங்க விவகாரமும் எழுந்துவிடவும், இந்த விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்தும், பிரதமர் வருகையின்போது எதிர்ப்புகளை பதிவு செய்ய காத்திருக்கிறார்.. இப்போது விஷயம் என்னவென்றால், காங்கிரசும்சரி, வேல்முருகனும் சரி, இரண்டு கட்சிகளுமே திமுகவின் கூட்டணி கட்சிகள்தான்.. தன்னுடைய கூட்டணி கட்சிகளை, திமுக இன்றைய தினம் எப்படி சமாளிக்க போகிறது? என தெரியவில்லை.. அன்று இதே திமுக பிரதமர் வருகைக்கு கருப்பு கொடியை காட்டிய நிலையில், இன்று ஆளும் கட்சி என்பதால், பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவிக்க முடியாத நிலைமையில் உள்ளது..
கோ பேக் : மாறாக, நாட்டின் பிரதமரை வரவேற்கவே செய்யும் நிலைமையில் திமுக உள்ளது.. இதுதான் ஒரு மாநில அரசின் கடமையும்கூட.. ஆனால், ஒருமுறை சீமான் பேசும்போது, ஒரு குடையை உங்களால, கருப்பாக மோடிக்கு முன்னாடி பிடிக்க முடியுதா? எதிர்க்கட்சியாக இருந்தால் "கோ பேக்"? ஆளும் கட்சியாக இருந்தால் "வெல்கமா"??" என்று காட்டமாக கேட்டிருந்தார். பொதுவாக, ஒரு கட்சியின் சொந்த கருத்தியல்புகள், கொள்கைகள் என்பது வேறு, மாநில அரசு என்பது வேறு.. இந்த விஷயத்தில்தான் திமுக தன்னை சரியான விதத்தில், பாஜக மேலிடத்தை அணுகியும் வருகிறது.. அந்தவகையில், திமுக அரசு, பிரதமர் மோடியை வரவேற்க செய்யும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

பாமக திமுக: ஆனால், தன்னுடைய சொந்த கூட்டணி கட்சிகளையும் கட்டுப்படுத்த முடியாது.. வேண்டுமானால், முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.. அதை காவல்துறையும் கடந்த 2 தினங்களாகவே தீவிரப்படுத்தியும் வருகிறது. இங்கு இன்னொன்றையும் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.. கடலூர், விழுப்புரம், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, மாவட்டங்களில் ஓரளவு வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளை வேல்முருகன் வைத்துள்ளார்.. திமுக கூட்டணியில் பாமக உள்ளே வருவதாக ஒரு பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது..
அதற்கேற்றவாறு வேல்முருகன், சமீபகாலமாக திமுக அரசையும் கேள்விகேட்டு விமர்சித்தும் வருகிறார்.. ஒருவேளை பாமக திமுக கூட்டணியில் இடம்பெற்றால், வேல்முருகனின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை. ஆனால், திமுக விரும்பியிருந்தால், 2019 தேர்தலிலேயே பாமகவை கூட்டணிக்குள் வைத்திருக்கலாம்.. அல்லது 2021-லேயே அந்த கூட்டணியை உள்ளே கொண்டு வந்திருக்கலாம். அப்படி பாமக கூட்டணிக்கு வராமலேயே திமுக பெரிய இழப்பை சந்திக்காததற்கு காரணமே, வேல்முருகன்தான் என்கிறது ஒரு தரப்பு..
காரணம், வட மாவட்டத்தில் பாமகவுக்கு இணையாக இல்லாவிட்டாலும் கணிசமான வாக்குகள் வேல்முருகனுக்கு உள்ள நிலையில், பாமக பெல்ட்டில் உள்ள வேல்முருகனை, கூட்டணிக்குள் கொண்டுவந்து, திமுக கூட்டணி கணக்கை போட்டு, அதில் வெற்றியும் பெற்றதை சுட்டிக்காட்டுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்..

தற்போது, திமுக கூட்டணிக்குள் பாமக உள்ளே வர முயற்சி நடப்பதாக செய்திகள் கசிந்து வரும்நிலையில், திமுக அரசை, சில சமயங்களில் வேல்முருகனும் விமர்சித்து வருவதையும் சுட்டிக்காட்டவே செய்கிறார்கள். எனினும், இதெல்லாம் கூட்டணி விவகாரம் என்றாலும், இன்றைய தினம் பிரதமர் வருகையின்போது எதிர்ப்புகளை தமிழக வாழ்வுரிமை பதிவு செய்தால், அது திமுக அரசுக்கு நிச்சயம் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள்.. காங்கிரசுக்கும் இது பொருந்தும்.. எனவே, இந்த 2 கூட்டணி கட்சிகளையும், ஆளும் தரப்பு எப்படி கையாள போகிறது என்பது இன்று தெரிந்துவிடும்.
-
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
Velmurugan: விஜய் உடன் கூட்டணி அமைக்கிறதா தவாக? வேல்முருகன் முன் இருக்கும் கூட்டணி வாய்ப்புகள் என்ன? -
திமுகவால் எப்படி சமூகநீதி அரசாக நடைபோட முடியும்? ஊழலை தோலுரித்து காட்டுவேன்! வேல்முருகன் -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
3 தொகுதிகள்.. அதிமுக கூட்டணியில் இணையும் தவாக? வேல்முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆபர்! -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
Velmurugan: அதிமுகவில் 3 சீட்? பாஜக கூட்டணிக்கு செல்லமாட்டேன்! தவாக வேல்முருகன் உறுதி! -
வேல்முருகன் குறிவைக்கும் 'அந்த' 3 தொகுதிகள்! பாமக கோட்டையைக் கைப்பற்றத் துடிக்கும் தவாக! -
திமுகவில் அடுத்த விக்கெட்? காங்கிரசுக்கு தந்த சீட்டால் வினை.. தமிழகத்தில் கனவாகும் ஸ்வீப் சக்சஸ் -
சொதப்பும் ஸ்டாலின்.. திமுகவுக்கு எதிராக திரும்பும் வன்னியர் வாக்கு! தலித் வாக்குகளை பிரிக்கும் விஜய் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்!












Click it and Unblock the Notifications