சென்னை பல்கலை... விழாவில் பங்கேற்க அருண்ஜெட்லிக்கு எதிர்ப்பு.. 15 மாணவர்கள் சிறை வைப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி வருவதையொட்டி 15 மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்தில் சிறை பிடித்து வைத்துள்ளனர் போலீசார்.

இன்று மாலை சென்னைப் பல்கலைக்கழகத்தில் விழா ஒன்றில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி சென்னை வந்துள்ளார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.

Arun Jaitly visits Madras University, 15 students arrested

இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் 15 பேரை போலீசார் வளாகத்திற்குள் சிறை வைத்துள்ளனர். குறிப்பிட்ட 15 மாணவர்களை வெளியேறவிடாமல் போலீசார் சிறை பிடித்துள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சென்னை பல்கலைக்கழகத்தில் இதே போன்று ஒரு விழாவில் கலந்து கொள்ள வந்த போது, மாணவர்கள் எதிர்ப்பு பதாகைகளை ஏந்தி வெங்கய்ய நாயுடுவிற்கு எதிராகப் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Fifteen student has been arrested due to union minister Arun Jaitly visits Madras University.
Please Wait while comments are loading...