சட்டென்று மாறுது வானிலை.. சென்னையில் சாரல் மழை.. ஜில் ஜில் காற்றால் ஏசி ஸ்விட்ச் ஆன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சென்னைக்கு இந்திய வானிலை மையம் வார்னிங்!- வீடியோ

சென்னை : சென்னையில் கனமழையை கொட்டித் தீர்த்த வடகிழக்குப் பருவமழை கடந்த 2 நாட்களாக லீவு விட்டிருக்கும் நிலையில், நகர் முழுவதும் ஜில் ஜில் காற்றுடன் நகரின் சில பகுதிகளில் லேசான சாரலுமாக பெய்து வருகிறது.

வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 27ம் தேதி தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. அன்று முதலே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர், நாகை மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. கடந்த வாரம் முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னையின் புறநகர்ப் பகுதிகள் வெள்ளக்காடானது.

As rain reduces in Chennai city chill climate observes

இந்நிலையில் திங்கட்கிழமை முதல் மழையின் அளவு படிப்படியாக குறைந்து கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் மழையின்றி வெயில் தலை காட்டி வருகிறது. உச்சி வேளையில் வெயில் சுள்ளென்று சுட்டெரித்தாலும், 3 மணிக்கு மேல் நகரின் பல பகுதிகளில் மேகம் சூழ்ந்து கொண்டு குளிர்ந்த காற்று வீசுகிறது. இதனால் சென்னைவாசிகள் சூடான பானங்கள், கரகர மொறு மொறு தின்பண்டங்களை நாடிச் செல்கின்றனர்.

இதனிடையே இன்று மாலையில் சென்னையின் கோடம்பாக்கம், சூளைமேடு, வேளச்சேரி, திநகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட நகரின் சில பகுதிகளில் சுமார் 10 நிமிடங்கள் லேசான சாரல் மழை பெய்தது. சென்னையில் ஞாயிற்றுக் கிழமை வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் திங்கள், செவ்வாய்கிழமைகளிலேயே மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மைய கணிப்புகள் கூறுகின்றன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
As rains in Chennai reduced Chill climate observing all around city and in some places drizzling added the climate even more chill.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற