சென்னையிலேயே உயரமான மெட்ரோ ரயில் நிலையமாக உருவெடுக்கும் ‘அசோக் நகர்’ ஸ்டேஷன்!
சென்னை: சென்னையிலேயே மிக உயரமான மெட்ரோ ரயில் நிலையம் என்ற பெயரை அசோக் நகரில் அமையும் ரயில் நிலையம் பெறப் போகிறது. அசோக் நகரில் மிக உயரமான ஆறு அடுக்குகளைக் கொண்ட மெட்ரோ ரயில்வே நிலையம் அமைக்கப்படவுள்ளது.
இதில், பிளாட்பாரம் தவிர பிற அடுக்குகளை வர்த்தகப் பயன்பாட்டிற்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன. அசோக் நகர் மெட்ரோ ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இந்நிலையில், அக்கட்டிடத்தில் மேலும் நான்கு அடுக்குகளைச் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

40 அடி உயரம்...
இப்புதிய அடுக்குகளை வர்த்தக பயன்பாட்டிற்கு விடுவதன் மூலம் வருமானத்தைக் கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஆறு அடுக்குகளைக் கொண்ட அசோக் நகர் மெட்ரோ ரயில் நிலையம் கட்டப்பட்டால் அதன் உயரம் 40 அடி இருக்கும் எனக் கூறப்படுகிறது.

உயரமான ரயில் நிலையம்...
மேலும், இதுவே சென்னையின் மிக உயரமான மெட்ரோ ரயில் நிலையம் என்ற சிறப்பைப் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்க்கிங் ஏரியா...
மேலும், இந்த ரயில் நிலையத்தின் அருகிலேயே மிகப்பெரிய பார்க்கிங் ஏரியா கொண்டு வரப்பட உள்ளதாம். இதன் மூலம் ரயில் பயணிகள் மட்டுமின்றி மற்ற பொது மக்களும் பயன் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தகப் பகுதிகள் அதிகம்...
அசோக் நகர், நகரின் முக்கிய பரபரப்பான இடம் என்பதாலும், வர்த்தகப் பகுதிகள் இதைச் சுற்றி அதிகம் இருப்பதாலும், இந்த ரயில்வே ஸ்டேஷன் ஆறு அடுக்குக்கொண்டதாக மாற்றப்படவுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுமானப் பணிகள்...
அதேபோல், கோயம்பேட்டிலிருந்து பரக்கி மலைக்கு இடைப்பட்ட எட்டு மெட்ரோ ரயில் நிலையங்களிலும் கட்டுமானப் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன.

சுரங்க ரயில் நிலையம்...
அதேபோல சுரங்க ரயில் நிலையங்களிலேயே சென்ட்ரல் சுரங்க மெட்ரோ ரயில் நிலையம் தான் மிகப் பெரியதாக உருவாக்கப்படுகிறது. இந்த ரயில் நிலையத்தில் எம்ஆர்டிஎஸ் மற்றும் சாதாரண மின்சார ரயில் இணைப்பும் சந்திக்கும் வகையில் மிகப் பெரியதாக இந்த மெட்ரோ சுரங்க நிலையம் அமைக்கப்படுகிறது.

வணிக நிறுவனங்கள்...
மேலும் சுரங்க ரயில் நிலையங்களில் அவற்றின் பரப்பளவை பொறுத்து வணிக நிறுவனங்களுக்கும் அதிக அளவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications